அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - கடகம்

கருத்தாழமிக்க சிந்தனை கொண்டு செயல்படும் கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சந்திரன் ஆறாமிடத்தில் அமர்ந்து விரைய குருவை பார்ப்பதும், தனஸ்தானத்தில் லாபாதிபதியுடன் கேது இணைவதும், உங்களின் மனவலிமையும், பொருளாதார வளர்ச்சியையும் தடைபடுத்தும் என்பதால் புதிய முயற்சிகளுக்கு தற்சமயம் தடை விதித்து கொள்வது நல்லது.
உங்களின் ராசிக்கு இம்மாதம் 08-10-2025 அன்று முதல் குரு அதிசாரமாக ராசிக்குள் பிரவேசம் செய்து அவரின் சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் இருப்பதால் உங்களுக் இதுவரை தடைகளாக இருந்த பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வரும் வரும் என்று எதிர்பார்த்த நிதிகள் பல காலமாக தாமதப்பட்ட நிலைமாறி உடனடியாக பண வரவு வர ஆரம்பிக்கும். எதை செய்வது என்று குழப்பம் நீடித்த நிலைமாறி, அதிலிருந்து விடுபடுவீர்கள். அட்டமசனி பார்வை இருந்தாலும் அதனை இதுவரை குரு பார்வை பெற்றதால் பாதிப்பின்றி இருந்தது. இனி அதிசார காலம் வரை சற்று புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது.
நீங்கள் பணிபுரியுமிடத்தில் உங்களுக்கு தற்காலிக சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத புனித யாத்திரை சென்று வருவீர்கள். உடல் நலமின்றி இருந்த உங்களுக்கு சுறுசுறுப்பான பலம் கிடைக்கும். வருமானத்திற்கு அதிகமான செலவு வந்தாலும் அதனை சரி செய்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சிலருக்கு திடீர் வரன் அமையும். அரசியலில் இடம் பொருள் பார்த்து நடந்து கொள்வீர்கள். யாருக்கும் பிணயம் இடுவதை தவிர்ப்பது நல்லது. முன் யோசனை அவசியம்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, ஆரஞ்சு, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
03-10-2025 வெள்ளி இரவு 07.25 முதல் 05-10-2025 ஞாயிறு இரவு 12.24 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறுகளில் ராகு காலத்தில் பைரவர் வழிபாடு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி நவகிரகங்களை ஒன்பது சுற்று சுற்றி வேண்டிக் கொண்டு வர வரும் துன்பம் பறந்து போகும்.