அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - தனுசு

அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - தனுசு

தன்னுடைய கொள்கைகளிலிருந்து மாறாத குணம் கொண்ட தனுசு ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குருவின் பார்வை பெறுவதும் யோகாதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் அமர்வதும் உங்களை ஊக்கபடுத்தி வளம் பெற செய்யும். காரியங்களையும் செயலாக மாற்றி வேசமாக செயல்படுவீர்கள். ராசியில் அட்டமாதிபதி சந்திரன் அமர்ந்தாலும் குரு பார்வை பெறுவது நற்பலனை பெற்று தரும்.
 
லாபஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியுடன் செவ்வாய் அமர்ந்து தொழிலில் எதிர்பாராத நற்பலன்களை பெற்று தருவதால் கிடைக்க வேண்டிய சலுகைகளை கேட்டு பெறுவீர்கள். இம்மாதம் தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடுவீர்கள். அதிசார குரு அட்டம ஸ்தானத்தில் அமர்வதால் சற்று கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. யாருக்கு பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது. பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பது உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக அமையும்.
 
தன்னை சார்ந்த பலருக்கு உதவி செய்வதில் சிறந்தவராக இருப்பீர்கள். இதனால் பல கஷ்டங்களை அடைய வேண்டி வரும். துணையாக யாரும் இல்லை என்றாலும் கூட அவருக்காக தன்னை வருத்திக் கொள்ளும் நிலை வரும். கலைத்துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கொடுத்த இடத்தில் பணம் தாமதமாக வரும். ஒன்பதிற்குரியவன் பத்தில் அமர்ந்தால் ஏதாவது தர்மம் செய்ய வேண்டி வரும். எளிய மக்களுக்கு உதவி செய்வீர்கள். பொது நலன் கருதி நீங்கள் எடுக்கும் முடிவிற்கு அனைவரின் ஆதரவு கிடைக்கும். எது சரியோ அதை செய்வீர்கள். சுமையாக எதையும் கருதாமல் உடனே அதனை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கடமை தவறாமல் பணி செய்வீர்கள். பிறருக்கு தீங்கு விளைவிப்பது பாவம் என்ற கொள்கையை கடைசி வரை கடைபிடித்து வாழ்வீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
மஞ்சள், வெண்மை, ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, வடகிழக்கு. தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
14-10-2025 செவ்வாய் பகல் 11.59 முதல் 16-10-2025 வியாழன் மாலை 05.07 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெற்றிலை மாலை இட்டு வேண்டிக் கொள்ள உங்களின் தடைகள் முழுமையாக நீங்கி நன்மை பெறுவீர்கள்.