குரு பெயர்ச்சி பலன்கள் - 2026 - மேஷம்

குரு பெயர்ச்சி பலன்கள் - 2026 - மேஷம்

செய்யும் தொழிலை தெய்வமாக எண்ணி செயல்படும் மேஷ ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு ஒன்பது பனிரெண்டுக்குரிய குரு பகவான் நான்காமிடத்திற்கு பெயர்ச்சியாகிறார். வரும் 26-05-2026 முதல் சுகஸ்தானத்தில் ஓராண்டு பயணம் செய்கிறார். இடையில் இரண்டு மாதம் அதிசாரமாக பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சென்று பின் வக்கிரகதியாகி பலன் தருகிறார்.
 
உங்களின் பாக்கியாதிபதியான குரு பகவான் சுகஸ்தானத்தில் அமர்ந்து எட்டாமிடத்தையும், தொழில் ஸ்தானத்தையும், விரையஸ்தானத்தையும் பார்வை இடுவது மறைவுஸ்தானாதிபதி மறைவு ஸ்தானத்தை பார்வை இடுவது சிறப்பான பலனாக அமையும். வெளிநாட்டு தொடர்புகள், வெளிநாடு சென்று வருதல் வெளிநாட்டு வேலை போன்ற வாய்ப்புகள் தேடி வரும். இனி எல்லாம் நல்ல காலமாக அமையும். சனி பகவானை குரு உச்சப் பார்வை பார்ப்பதால் விரைய சனியின் தாக்கம் குறைவாகவே இருக்கும். தொடர்ந்து உங்களுக்கு ஊக்கபடுத்தும் படியும் வளம் பெறுவது அமையும்.
 
செய்யும் தொழிலில் நீங்கள் நேசிக்கும் போது அது உங்களை வாழவைக்கும். பாக்கியாதிபதி பலனே உங்களுக்கு முழுபலனும் கிடைக்க பெறுவீர்கள். எல்லாம் சுமூகமான அளவில் நடக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் இனி மறையும். வளர்ச்சிக்கு தகுந்த வருமானம் கிடைக்கும் எதை பொறுத்து செய்வோம் என தள்ளி வைத்தீர்களோ இனி அதனை செயல்படுத்த துவங்குவீர்கள். இடையில் இரண்டு மாதம் குரு அதிசாரமாக செல்வது உங்களுக்கு கூடுதலான நல்ல பலனை பெற்று தரும்.
 
20-10-2026 முதல் 22-12-2026 வரை பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்வை இடுகிறார். இதனால் மனவலிமையும் எதையும் சாதிக்க நினைக்கும் மனதிடமும் வந்து வளம் பெறுவீர்கள். இந்த கால கட்டத்தில் அலைச்சல் அதிகரிக்கும் செல்லுமிடமெல்லாம் சிறப்பாக இருக்கும். கருத்து ஒற்றுமையை வலியுறுத்தி பேசுவீர்கள். பொது விடயங்களில் நீங்கள் என்ன நினைத்தீர்களோ அது நடக்கும். பின்பு வக்கிரகதியாகி மீண்டும் சுகஸ்தானத்தில் உச்சம் பெற்று வருவது விட்டு போன காரியங்களை செயல்படுத்துவீர்கள். சுமையாக இருந்த வேலை இலகுவாகும். தற்செயலாக எல்லாம் நடப்பது போலவே இருக்கும்.
 
அட்டம ஸ்தானத்தை குரு பார்வை இடுவது தடைப்பட்ட காரியங்கள் சிறப்பாக இயங்கும். முதலீடு இல்லாத தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், டிராவல் ஏஜென்ஸி, கணணி சேவைகளின் மூலம் வருமானம் கிடைக்க பெறுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும். பண பரம் உண்டாகும்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு நெய் தீபம் ஏற்றி இனிப்பு  வைத்து மஞ்சள் பூ சாற்றி வேண்டிக் கொள்ள உங்களின் எண்ணம் போல வாழ்வு மலரும். தொழில் சிறந்து வருமானம் அதிகரிக்கும்.