யோகா செய்வதால் குணமாகும் நோய்கள்

யோகா செய்வதால் குணமாகும் நோய்கள்

உடலில் எந்த மாதிரியான நோய்கள் ஏற்பட்டாலும், அதனை சரிசெய்ய பல வழிகள் உள்ளன. ஆனால் பெரும்பாலானோர் உடலில் ஏதேனும் நோய் வந்தால், உடனே மருத்துவரை அணுகி, அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்கி, தவறாமல் சாப்பிட்டு வருவார்கள். இதனால் எந்த தவறும் இல்லை. இருப்பினும் இந்த செயல் மட்டும் உடலில் ஏற்படும் நோய்களை முற்றிலும் சரிசெய்துவிடாது. எவ்வாறு உடலில் நோய் ஏற்படுவதற்கு நமது பழக்கவழக்கங்கள் காரணமோ, அதேப் போல் நோயை சரிசெய்ய ஒருசில செயல்களான உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும். அதிலும் உடற்பயிற்சியை விட யோகாவிற்கு அதிக சக்தி உள்ளது. எப்படியெனில் உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை தான் குறையும் என்று தெரியும். ஆனால் யோகா செய்தால், ஆஸ்துமா, மூட்டு வலி, நீரிழிவு, முதுகு வலி போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியும்.

ஆஸ்துமா
ஆஸ்துமாவை யோகாவினாலேயே சரிசெய்துவிட முடியும். அதிலும் மூச்சுப் பயிற்சிகளில் ஒன்றான பிரணாயாமத்தை தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஆஸ்துமாவை சரிசெய்துவிட முடியும்.

நீரிழிவு
குணப்படுத்த முடியாத நோய்களில் நீரிழிவும் ஒன்று. ஆனால் யோகாவில் ஒன்றான இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பாலாசனத்தை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்த முடியும். அதுவும் அதனை நாள்தோறும் பிராணயாமம் செய்து வருவதன் மூலம் சரிசெய்யலாம்.

செரிமான பிரச்சனை
அஜீரணக் கோளாறு ஒரு பெரிய நோய் இல்லாவிட்டாலும், தற்போது வேலை செய்வோருக்கு, இந்த பிரச்சனை அதிகம் உள்ளது. இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு மருந்துகள் இருப்பினும், இங்கு காண்பிக்கப்பட்டுள்ள பாலாசனத்தை செய்து வருவதன் மூலம் நீக்க முடியும்.

ஒற்றை தலைவலி
போதிய இரத்த சுழற்சி உடலில் இல்லாததால், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஒற்றைத் தலைவலியானது ஏற்படுகிறது. எனவே உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கு சிரசாசனம் செய்ய வேண்டும்.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!