2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மேஷம்

2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மேஷம்

தைரியமும் துணிச்சலும் கொண்டு எதையும் செய்யும் வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குரு அமர்ந்து இருப்பதும் ராசிநாதன் செவ்வாய் நீசம் பெற்று அமர்வதும் பொருளதாரத்திலும் சுய முயற்சியிலும் கவனம் செலுத்த வேண்டி வரும். உங்களின் ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்கியஸ்தானத்தில் சந்திரனும் சூரியனும் சேர்ந்திருப்பது உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் தொழிலிலும் வருமானத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 
 
உறுதியான உங்களின் செயல்பாடுகளுக்கு தனித்தன்மையுடன் தெளிவான முடிவுகளுக்கு உங்களுக்கு ஊக்கத்தை உருவாக்கும். குறுகிய காலத்தில் நீங்கள் அடையவோ நடந்திரும் என்றோ நினைக்காமல் தொடர்ந்து செயலில் நின்று செயல்பட்டால் நீங்கள் எண்ணிய வாழ்கை உறுதியுடன் நடக்கும். பாதுகாப்பு கருதி சில விசயங்களில் நீங்கள் செயல்படும் போது உங்களுக்கு நிறைய அனுபவங்கள் உண்டாகும். 
 
மே மாததிற்கு பின்பு இன்று சில காரியங்கள் உங்களின் எண்ணம் போல் சிறப்பாக அமையும். விளையாட்டுத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தி வாழிவிலும் எதிர் கொள்ளும் அனைத்து பிரச்சனைகளை துணிவுடன் செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். 
 
பொது நலன் கருதி நீங்கள் செய்து வரும் காரியங்களில் பாரட்டு பெறுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டிருக்காமல் உடனடியாக செயலபடுவதும் தொடர் முயற்சிகள் மூலம் இந்த ஆண்டு முழுவதும் உழைத்தால் உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். எதிர்பார்புகள் சரியாக நடக்கும்.
 
அதிர்ஷ்ட மாதம் :  
 
ஜனவரி, ஏப்ரல், ஜுன், ஜுலை, நவம்பர், டிசம்பர்,
 
அதிர்ஷ்ட எண்கள் : 
 
1, 3, 4,
 
அதிர்ஷ்ட நிறங்கள்: 
 
வெண்மை, ஆரஞ்சு, சிவப்பு,
 
பரிகாரங்கள்:
 
செவ்வாய் கிழமைகளில் பைரவருக்கு விளக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு சிவப்பு அரளி பூ வைத்து தொடர்ந்து வேண்டிக்கொள்ள உங்களின் அனைத்து காரியமும் வெற்றியை தரும்.