2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மீனம்

வைராக்கியம் மனவலிமையும் கொண்டு விளங்கும் மீன ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் எதையும் நீங்கள் தொடர் முயற்சி எடுத்து வந்தால் வெற்றி நிச்சயம். குடும்பபாரம் இனி உங்களுக்கு வராது. எடுத்த செயலை முடித்து வெற்றி பயணம் செய்து வருவீர்கள். உங்களின் தொழில் ஸ்தானத்தின் சூரியனுடன் சந்திரன் அமர்வது தொழிலில் போட்டி பொறாமைகளால் இருந்து வந்த சூழ்நிலைகள் மறையும்.
எதையும் சொல்லாமல் செய்து வருவீர்கள். புதிய எந்த திட்டமும் உங்களுக்கு சரியான தெளிவை கொடுக்காது என்பதால் அதனை தள்ளி வைக்கவும். உங்களுக்கு தற்சமயம் விரையசனி காலம் நடந்து வருவதால் எந்த புதிய முயற்சிகளையும் செய்யாமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு பிணயம் இடுவதும், பொறுப்பு ஏற்று பணம் கொடுப்பதும் உங்களுக்கு அதனை இழக்கும் சூழ்நிலை உருவாகும்.
எதையும் குழப்பிக் கொள்ளாமல் எந்த முடிவாக இருந்தாலும் யோசித்து செயல்படுவது நல்லது. காலம் அறிந்து செயல்படுவது நல்லது. குறுகிய கால முதலீடுகளில் விரையம் வராமல் தெழில் செய்து கொள்வது நல்லது. இந்த ஆண்டு மத்தியில் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆரம்பத்தில் கஷ்டம் இருந்தாலும் யோக பொருட்களின் செல்வாக்கும்.
சொல்வாக்கும் சிறப்பாக அமையும். இசை கலையில் உங்களுக்கு நற்பெயரும், பாராட்டுதலும் கிடைக்கும். எந்த ஒரு செயலிலும் அவசரம் இன்றி இருப்பது நல்லது. குடும்பத்தில் சலசலப்பு இருந்தாலும் அதிக பாதிப்பை தராது. எதற்கும் நீங்கள் உங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். அரசியலில் விருப்பம் இல்லை என்றாலும் சில நேரம் தலையீடுகள் இருக்கும்.
அதிக ஆர்வம் செலுத்தினால் விரையம் உண்டாகும். குடும்ப சூழ்நிலை காரணமாக சிலருக்கு வேறு வேலையை தேடிவரும். சூழ்நிலை உண்டாகும். பணத்தை தேடி நீங்கள் அலைவேண்டாம் நேரம் வரும்போது காலச்சரியான போத தானே பணம் உங்களை தேடிவரும். மொத்தத்தில் இந்த ஆண்டு லாபம் நஷ்டம் களந்ததாக அமையும்.
அதிர்ஷ்ட எண்கள்:
3, 1, 2, 5.
அதிர்ஷ்ட மாதங்கள்:
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஜுலை, ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், வெண்மை, சிவப்பு.
பரிகாரங்கள்:
ஞாயிறு மாலை ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமும், சுப்ரமணியருக்கு நெய் தீபமும் தொடர்ந்து போட்டு உங்களின் வேண்டுதலை சொல்லி வர எதிர்கால நற்பலன்கள் மேன்மை உண்டாகும்.
கணித்தவர்:
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554