2025 - 2026 ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - கன்னி

2025 - 2026 ராகு / கேது  பெயர்ச்சி பலன்கள் - கன்னி

தைரியமும், துணிச்சலும் கொண்டு விளங்கும் கன்னி ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு வரும் 26-04-2025 முதல் ராகு ஆறாமிடத்திலும், ஜென்ம கேது விரைய ஸ்தானத்திலும் அமர்கிறார்கள். புதிய யுக்திகளுக்கு வழிவகுப்பார்கள். 
 
இனி ஆறாமிட ராகு சனியுடன் இணைவு பெறுவதும் நான்காமிட எட்டாமிட பனிரெண்டாமிட பார்வை உண்டாவது ராகு எழுச்சியுடன் உங்களுக்கு ஊக்கம் தந்து நற்பலன்களை பெறுவதற்கு உதவி செய்வார். சுகஸ்தானத்தை பார்ப்பது பொருளாதாரத்தில் வளர்ச்சி இருந்தாலும் உடல்நலனில் கவனம் மறந்து உறவுகளும், நண்பர்களும் உங்களுக்கு உதவி செய்வார்கள். பெரிய கடன் வாங்கி சிறிய கடன்களிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
 
விரைய கேது வெளிநாட்டு தொடர்புகளை ஏற்படுத்தி வெற்றியை பெற உதவுவார். சூரியன் வீட்டில் இருப்பதால் அரசியல்வாதிகளுக்கு பக்கபலமாக உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதற்கும் அஞ்சாமல் செயல்படுவீர்கள். ஆன்மீக பயணத்திற்கு செலவு செய்ய வேண்டிவரும். வெளிநாடு பயணம் சிலருக்கு அமையும். பொது வாழ்வில் இருப்பவருக்கு செல்வாக்கு குறையாது என்றாலும் கூடுதல் செலவுகள் வரும். தனவரவுக்கு சிரமம் வராது என்றாலும் அதனை அடைய சில சிரமம் பட வேண்டி வரும். தங்க நகைகளை மீட்டுதல், வங்கி கடன் மூலம் சில கடன்களை தீர்த்து கொள்தல் போன்ற காரியம் நன்றாக அமையும். குரு பெயர்ச்சிக்கு பின்பு பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது.
 
பரிகாரங்கள்:
 
ஞாயிறு மாலை ராகுகாலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு ராகுக்கு உளுந்துவும், கேதுவுக்கு கொள்ளும் வைத்து, அரளி மாலை போட்டு வேண்டிக் கொள்ள நினைத்த காரியம் கைகூடும்.