வைகாசி மாதம் மேஷ ராசிகாரர்களுக்கான பலன்கள்!

வைகாசி மாதம் மேஷ ராசிகாரர்களுக்கான பலன்கள்!

ஹேவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 15.05.2017 முதல் 14.06.2017 வரை!

எடுத்த காரியத்தை முடிக்கும் வரை இடை விடாது செயல்படும் மேஷராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதனும் பஞ்சநாதனும் தனஸ்தானத்தில் அமர்வதும் பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் அமர்வதும் பொருளாதாரத்திலும் தொழிலிலும் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.

பணியாளர்களுக்கு

பணியின் இருந்து வந்த சிரமங்கள் மறையும். தினமும் உங்களின் பணிகளை வகைபடுத்தி அதற்கு தகுந்தபடி நடந்து கொள்வீர்கள். தோட்ட தொழிலாளர்களின் உற்பத்தி அதிகரிக்கும். தொழிற்சங்க பணிகளின் சிறப்பாக செயல்படு வீர்கள். தொழிலில் கவனம் செலுத்துவீர்கள். பொருளாதாரத்தில் வளர்ச்சி கிட்டும்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு

பொது கருத்துகளை வரவேற்று ஒத்துழைப்பு கொடுப்பீர்கள். எதிரிகளின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்த முடிவுகளை எடுத்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களின் அன்பை பெறுவீர்கள். முடிவெடுக்கும் முன்பு சில ஆலோசனை பெற்று சிறப்பாக செயல்பட வேண்டிய முயற்சிகளை செய்வீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.

வியாபாரிகளுக்கு 

தொழிலில் உங்களின் கவனம் சிறப்பாக அமையும். எதிலும் உரிமை எடுத்துக் கொள்வீர்கள். இரும்பு சார்ந்த தொழிலிலும், கட்டுமான பொருட்கள் விற்பனையில் கூடுதல் ஆதாயம் பெறுவீர்கள். வெளிநாட்டு பொருட்களின் மூலமும், ஆடம்பர பொருட்களில் மூலம் வியாபாரத்தை பெருக்கி கொள்வீர்கள். பணபுழக்கம் இருக்கும்.

கலைஞர்களுக்கு

கலைதுறையினர் தொடர்ந்து நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்து ரசிகர்களின் அன்பை பெறுவீர்கள். திருவிழாக்களில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இரவு நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வேண்டி வரும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.

பெண்களுக்கு

பெண்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். தொடர்ந்து எடுக்கும் செயல்களில் வளர்ச்சியை பெறுவதுடன், புதிய தொழில் வாய்ப்பு பெறுவீர்கள். சுயதொழிலில் பலரின் உதவி கிட்டும். கணவரின் தொழிலுக்கு உதவிகளை செய்வீர்கள். 

மாணவர்களுக்கு

சட்டம், விவசாயம். ஆராய்ச்சி, மருத்துவ கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். ஞாபக சக்தி அதிகரித்து கல்வியில் உயர்வு பெறுவீர்கள். 

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்

07.06.2017 புதன் மாலை 06.08 முதல் 10.06.2017 சனி அதிகாலை 05.51 மணி வரை

நட்சத்திர பலன்கள்

அசுபதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்

குறுகிய காலத்தில் வளர்ச்சியை எட்டுவீர்கள். சொந்த தொழிலில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும்.

பரணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்

புதிய தொழில் வாய்ப்புகளை பெறுவீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு நினைத்த காரியத்தில் வெற்றியை பெறுவீர்கள். முதலீடுகளில் கவனம் செலுத்தவும்.

கார்த்திகை 1ம் மாதம்

பொது விடயங்களில் கவனத்துடன் செயல் பட்டு நல்ல பலனை பெறுவீர்கள். சந்தர்ப்ப சூழ் நிலைகளுக்கு தகுந்தபடி நடந்து கொள்வீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெண்மை, இளம் நீலம்

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், திங்கள், சனி

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியரையும், திங்கள்கிழமை சிவனையும் வணங்கி வருவதும், ஏழைக்கு உதவி செய்து வருவதும் உங்களின் வாழ்வு வளம் பெறும். பொருளாதாரம் சிறக்கும்.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!