விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - சிம்மம்

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - சிம்மம்

கனவுகளை நனவாக்க திட்டமிட்டு செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் ஜென்ம கேதுவும், களத்திர ராகுவும் சனியுடன் இணைவது குடும்ப நிலையில் சில முடிவுகளை எடுக்க வேண்டி சூழ்நிலைகள் உருவாகும். அடுத்த குரு பெயர்ச்சியாகி லாபஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் வளர்ச்சிக்கு பெரிய உறுதுணையாக அமையும்.
 
இந்த ஆண்டு 26-04-2025 முதல் ஜென்ம கேதுவாக அமர்வது ஆன்மீக செயல்களில் ஈடுபாடுகள் கொள்வதும், ஆன்மீக தொடர்புகள் உண்டாகும். எதிலும் முதன்மை பெறும் வாய்ப்புகள் அமையும். சரியான பாதையை தெரிவு செய்து முன்னேற்றம் காண்பீர்கள். களத்திர ஸ்தானத்தில் சனியுடன் ராகு சேர்வது உங்களின் குடும்பத்தில் சில சச்சரவுகள் வந்து மறையும். எதையும் முன்கூட்டியே யோசித்து செய்வது உங்களுக்கு பக்கபலமாக அமையும். வெற்றியின் இலக்கை குறிகோளாக செயல்பட்டு வெற்றியைப் பெறுவீர்கள்.
 
இதுவரை குரு தொழில்ஸ்தானத்தில் அமர்ந்திருந்தது. உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் பல்வேறு சோதனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை களிலிருந்து விடுபட்டு.. இனி தொழில் முன்னேற்றமும், லாபஸ்தானத்தில் குரு அமர்ந்து முயற்சிகளுக்கு வெற்றியையும், புத்திர பாக்கியஸ்தானத்தையும் பெறுவீர்கள். இதுவரை களத்திர ஸ்தானம் கெட்டதால் பல பிரச்சனை இருந்து வந்தது. குரு பார்வையால் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக இருப்பீர்கள். எந்த கெடுபலனும் உங்களுக்கு வராமல் குரு அருளால் சிறப்பாக இருப்பீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:  
 
ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: 
 
சிவப்பு, மஞ்சள், ஒரஞ்சு.
 
அதிர்ஷ்ட எண்கள்: 
 
1, 3, 6, 9.
 
பரிகாரங்கள்:
 
சனிக்கிழமைகளிலும், ஞாயிறுகிழமைகளிலும் தொடர்ந்து பைரவருக்கு செவ்வரளி பூ மாலையும், நல்லெண்ணெய் தீபமும் ஏற்றி வர உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள்.