விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - கன்னி

சாதிக்க நினைத்ததை உடனே நிறைவேற்ற முயற்சிக்கும் கன்னி ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஆறாமிடத்தில் ராகுவும், விரைய ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து வெளிநாட்டு தொடர்புகளையும், எதிர்ப்புகளிலிருந்தும் மீண்டுவர வாய்ப்புகள் அமையும். தொழில் ஸ்தானத்தில் ஆண்டின் துவக்கத்தில் குரு அமர்வது தொழிலில் சில மாற்றங்களை பெறுவீர்கள். ஏற்கனவே செய்து வரும் தொழிலை விட்டு, வேறு தொழிலில் ஈடுபடுவதும். உத்தியோகத்தில் இருப்பவர்கள். சொந்த தொழிலில் ஈடுபடுவது உண்டாகும்.
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு 26-04-2025 முதல் ராகு ஆறாமிடத்தில் சனியுடன் இணைவது மறைமுகமான எதிரிகளிடமிருந்து விடுதலை பெறுவீர்கள். நீண்ட நாள் உடல் உபாதைகளிலிருந்து விடுவிக்கபட்டு உடல் நலன் பெறுவீர்கள். மற்றவர்கள் பேசும் ஆசை வார்த்தைகளை நம்பாமல், உங்களுக்கு தெளிவாக தெரியும் விடயங்களை மட்டும் உறுதியுடன் செயல்பட்டு நன்மை பெறுவீர்கள்.
இந்த ஆண்டு 11-05-2025 முதல் குரு பாக்கியஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்தில் அமர்வது பொதுவாக குரு பத்தில் இருந்தால் பதவி பறிபோகும் என்பார்கள். அமர்வது உங்கள் ராசிநாதன் வீடு மற்றும் மிதுனத்தில் அமரும் எந்த கிரகமும் கெடுபலன் தருவதில்லை என்பதால்.. தொழிலில் எந்த பாதிப்புகளும் வராது, என்றாலும் ஆன்லைன், தொழிலில் முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். ஆனால் எந்தவித ஆசை வார்த்தைகள் சொன்னாலும் அதில் உள்ள உண்மைத்தன்மையை உணர்ந்து செயல்படுவது மிகவும் முக்கியம். பொதுவாக இந்த ஆண்டு முழுவதும் உங்களின் எண்ணம் முழுமையாக நிறைவேறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண்கள்:
3, 5, 6.
பரிகாரங்கள்:
ஞாயிறு அன்று ராகு காலத்தில் (04.30 - 06.00) பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் மூன்று ஏற்றி, எள் கலந்த அன்னத்தை நைவேத்தியமாக வைத்து வேண்டிக் கொள்ள, சகல காரியத்திலும் நன்மை உண்டாகும்.