ஸ்ரீ பராபவ தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - கன்னி

ஸ்ரீ பராபவ தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - கன்னி

காரியத்தில் கண்ணாக இருந்து தொடர்ந்து செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டில் உங்களின் ராசிக்கு கண்டக சனியாக அமர்ந்தும் தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்தும் இருப்பது செய்யும் தொழிலில் மேன்மையை பெறுவீர்கள். திருமணத்தடை உண்டானாலும் குரு பார்வையால் தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
 
உங்களின் ராசிக்கு நான்கு, ஏழாமிடத்து அதிபதி குரு ஆண்டின் துவக்கத்தில் தொழில் ஸ்தானத்தில் அமர்வதால் கடனிலிருந்து விடுபடும் வாய்ப்பை பெறுவீர்கள். வைகாசி மாதத்தில் குரு லாபஸ்தானத்தில் அமர்ந்து முயற்சிகளுக்கு நல்ல பலனை பெற்று தரும். சுயமாக சிந்தித்து செயல்படும் வாய்ப்புகள் அமையும். ஏழாமிடத்தினை குரு பார்வை இடுவது உங்களின் கூட்டுத் தொழில் வெளிநாடு வேலை சார்ந்த காரியங்கள் விரைவில் செயல்படதுவங்கும். கல்வியில் முன்னேற்றம் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு கல்வி பயில வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்து சம்மந்தமான பேச்சு வார்த்தை சுமூகமாக அமையும். உறவுகள் பலப்படும் படியான நேர்மையான பேச்சாக அமையும். சின்ன மனகசப்புகள் வந்து பின் மறையும். பொது நிகழ்ச்சிகளில் மேடைகளில் பேசும் வாய்ப்பு அமையும். எதையும் சோதனையாக எண்ணாமல் சாதனையாக செய்து காட்டுவீர்கள்.
 
உங்களின் ராசிக்கு ஐந்து ஆறாமிடத்து அதிபதியான சனி பகவான் ஏழாமிடத்தில் அமர்வது உங்களுக்கு பொருளாதாரத்தில் எந்த பிரச்சனையும் வராது. என்றாலும், மனைவி, நண்பர்களின் அன்பும் அரவனைப்பும் குறைவாக இருக்கும். நெருங்கிய நண்பர் கூட சில நேரம் ஏதோ துரோகம் செய்வது போல தோன்றும். கணவன் மனைவிக்கு கருத்து வேறுபாடு உண்டாகும். எதை மறக்க நினைத்தீர்களோ அது நினைவில் வந்து பல மனவருத்தத்தை உண்டாக்கும், வெளிநாடு வேலை கிடைக்க பெறுவீர்கள். உங்களின் குடும்பத்தின் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள். எதையும் சாதித்து காட்டவேண்டுமென்று நினைப்பீர்கள்.
 
கார்த்திகை முதல் ராகு / கேது பஞ்சம ஸ்தானத்தில் ராகுவும் லாபஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து உங்களின் காரியத்தை எளிதில் முடிக்கும் வலிமையை பெறுவீர்கள். பூர்வ புண்ணிய பாவங்களை சரி செய்து கொள்ள பரிகாரம் மூலம் பலன் பெறும் சந்தர்ப்பம் அமையும். குருவுடன் கேது இணைவதால் செய்யும் தொழில் நல்ல வளர்ச்சியையும் பொருளாதாரத்தில் மேன்மையும் அடைவீர்கள். உங்களின் ராசிநாதன் புதனின் பார்வை பொறுத்து உங்களின் எண்ணம் நிறைவேறும் நல்ல ஆண்டாக இருக்கும். என்றாலும் சில சோதனைகளையும் சந்திக்க வேண்டிவரும். எதிர்கால நலனுக்கு சில சவால்கள் நன்மையாக அமையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
பச்சை, மஞ்சள், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
தெற்கு, மேற்கு, வடமேற்கு.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
3, 5, 7.
 
பரிகாரங்கள்:
 
ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் பைரவருக்கு முந்திரி மாலை கட்டி எலுமிச்சை தோலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தயிர் அன்னம் வைத்து வழிபட்டு வர சகல காரியமும் நல்ல வளர்ச்சியை பெற்று தரும்.