ஸ்ரீ பராபவ தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - மேஷம்
வாழ்க்கை வாழ உறுதுணையாக செயல்பட்டு செல்லும் மேஷ ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு சனி பெயர்ச்சியுடன் குரு பெயர்ச்சியும் வந்து அடுத்தடுத்து உங்களை பல சவால்களை உண்டு பண்ணி இறுதியில் உங்களின் மனபலத்தால் வெற்றியை பெறுவீர்கள். எதையும் நேர்நிலையாக எடுத்துக் கொண்டால் எல்லாம் ஜெயமாகும்.
கடந்த ஆண்டு இறுதியில் விரைய சனியாக வந்து உங்களுக்கு புதிய செலவுகளை ஏற்படுத்தி கொண்டு வருமானத்தை செலவு செய்ய செய்வார் சனி பகவான். எனினும் எந்த செலவையும் நீங்கள் சுப விரையமாக்கிக் கொண்டால்… அதன் பின் பலன்கள் உங்களுக்கு நன்மையை தரும். மேலும் பெண்ணுக்கு திருமணம் செய்தல், கல்விக்கு கடன் பெற்று உயர்கல்வி பயில செய்தல், காலி காணி வாங்குதல், காலியான காணியில் வீடுகட்டுதல் போன்ற நற்பலன்களை சுப விரையமாக ஆக்கிக் கொண்டால் எல்லாம் நன்மையாக அமையும். புதிய வாகனம் வாங்குதல், சேமிப்புகள் மூலம் பணம் சேர்த்தல், தங்க நகை வாங்குதல், பால் மாடு வாங்குதல் போன்ற காரியம் தவிர்ப்பது நல்லது.
இனி வைகாசியில் குரு பெயர்ச்சியாகி உங்களின் விரையஸ்தானத்தில் சனியை பார்ப்பது உங்களின் தேவையற்ற செலவுகளை குறைப்பதுடன் சனியால் வரும் துன்பத்தை தவிர்த்து கொள்தல் குரு அருளால் கிடைக்க பெறுவீர்கள். சொந்தங்கள் பகை ஏற்படுதல், கணவன் - மனைவிக்கு கருத்து வேறுபாடுகள் உண்டாகுதல், செய்யும் தொழிலில் சில தடங்கல் வந்து தொழில் செய்ய தடை உண்டாகுதல், வேலை செய்வதில் கவன குறைவு காரணமாக தண்டனை பெறுதல், வருமான இழப்புகள் உண்டாகுதல் குரு பார்வையால் குறைய ஆரம்பிக்கும்.
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் ராகு / கேது பெயர்ச்சி மூலம் ராகு தொழில் ஸ்தானத்திலும், கேது சுகஸ்தானத்திலும் அமர்ந்து உங்களின் தொழில் மேன்மை அடைய வழிவகுப்பார்கள். குருவுடன் கேது இணைவு பெறுவது பொருளாதார வளர்ச்சியை பெற்று தரும். குரு பார்வை ராகுவுக்கு கிடைப்பதால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எதிலும் உங்களின் நேர்நிலையான எண்ணங்கள் நல்ல வளர்ச்சியை பெற்று தரும். யாரையும் நம்பி ஏமாறாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், வெண்மை, பலவர்ணம்.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு,
அதிர்ஷ்ட எண்கள்:
2, 3, 9.
பரிகாரங்கள்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெண்ணை சாற்றி நீண்ட வஸ்திரம் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர சகல கஷ்டமும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். தடைகள் நீங்கும்.
















