செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - விருச்சிகம்

செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - விருச்சிகம்

தைரியமும், துணிச்சலும் கொண்டு எதையும் செயல்படுத்தும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் லாபஸ்தானத்தில் அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவது சிறப்பான நற்பலனை பெற்று தரும். உங்களின் ராசிக்கு யோகாதிபதி சந்திரன் ராசியில் அமர்வது சிறப்பான பலன்களை பெற்று தரும். சுறுசுறுப்புடன் எப்பொழுதும் இயங்கும். உங்களின் செயல்பாடுகள் சற்று தாமதமாக செயல்படவது மன அழுத்தத்தை தரும். எதையும் கவனமுடன் செய்வீர்கள்.
 
எதையும் குறுக்கு வழியில் செய்ய வேண்டுமென்று நினைக்கமாட்டீர்கள். உங்களின் நேர்மை உங்களின் கடமை உணர்வு செயலில் உறுதி தன்மை எத்தனை சோதனைகள் வந்தாலும் அனைத்திலும் உங்களின் நம்பிக்கைக்கு கிடைக்கும் வெற்றியே சரியான தீர்வாக இருக்கும். சோதனை காலங்களில் அதை பற்றி சிந்திக்காமல் உங்களின் பணியை ஏற்று நடப்பீர்கள். புதிய திட்டங்களை சிறிது காலம் தள்ளி போட்டு அடுத்த மாதம் துவங்குவது நல்லது. அட்டம குருவாக இருந்து தனஸ்தானத்தை பார்வை இடுவது பணபலத்தை கொடுக்கும். தேவைகள் அறிந்து அதற்கான வருமானம் கிடைக்க பெறுவீர்கள்.
 
அரசியலில் விருப்பம் இல்லை என்றாலும் அதன் தொடர்பான நண்பர்களுடன் தீராத பகைமை உண்டாகும். கலைத்துறையினருக்கு கிடைக்க வேண்டிய விருதுகளும், பாராட்டுகளும் சிறப்பான பலனை பெற்று தரும். உங்களின் தொழில் ஸ்தானாதிபதி சூரியன் ஆட்சி பெற்று இருப்பதால் தொழிலில் திக் பலம் பெற்று அரசு சார்ந்த உத்தியோகம் கிடைக்கப் பெறுவீர்கள். லாபாதிபதி புதனுடன் இணைவு பெற வாய்ப்புகள் அமையும்.
 
விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவீர்கள். வெளியூர், வெளிநாடுகளில் வேலை, வெளிநாட்டு கூட்டு தொழில் இனி நன்றாக இருக்கும். சோதனை காலங்களில் சிலருக்கு பதில் சொல்ல துணிச்சல் உண்டாகும். எதை நினைத்து செயல்பட்டீர்களோ! அதுவே உங்களை செயல்பட செய்யும். பொருளாதார நிலையை சரி செய்து கொள்ள வழி கிடைக்கும். பல நாள் கடன் தொல்லை மீண்டு வர வாய்ப்பு அமையும் உறவுகளின் விரிசல் மறையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
ஆரஞ்ச, வெண்மை, சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, வடமேற்கு, தென்மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
திங்கள், செவ்வாய், வெள்ளி.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
14-09-2025 ஞாயிறு இரவு 12.37 முதல் 17-09-2025 புதன் கிழமை அதிகாலை 04.07 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணி ராகு காலத்தில் நவகிரக வலம் வந்து பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு புளி சாதம் செய்து வரும் பக்தர்களுக்கு தானம் செய்து வர தடைகள் நீங்கி சுபிட்சம் பெறலாம்.