செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - கடகம்

செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - கடகம்

விவேகமும், மேன்மையும் கொண்டு விளங்கும் கடக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சந்திரன் பூர்வ புண்ணியஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானமான உச்ச வீட்டை பார்ப்பதால் பணபுழக்கம் நன்றாக இருக்கும். லாபாதிபதியும் ராசியில் அமர்ந்து ஏழாமிடத்தை பார்வை இடுவது உங்களின் கூட்டுத் தொழில் சிறப்பாக அமையும். வருமானத்திற்கு குறை இருக்காது. திறமையான உங்களின் வளர்ச்சி பெருமைக்குரியதாக அமையும்.
 
தனாதிபதி சூரியன் ஆட்சி பெற்று அட்டம ஸ்தானத்தில் சனி / ராகுவை பார்வை இடுவது மிக சிறப்பான வளர்ச்சியை பெற்று தரும். ஒரு சில நேரம் உங்களுக்கு உதவி செய்ய நல்ல நண்பர்கள் வருவார்கள். விரையஸ்தானத்தில் குரு அமர்ந்து செலவீனங்களை தருவார் என்பதால், அத்தியாவசிய செலவுகளை செய்து விட்டு பணத்தை வேறு சுபமான விடயங்களுக்கு பயன்படுத்தி கொள்வது நல்லது.
 
அட்டம சனியையும், ராகுவையும் குரு பனிரெண்டாமிடத்திலிருந்து பார்ப்பதால் தேவையற்ற காரியங்களிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் இழுபறியில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். உடல்நலனின் கவனம் செலுத்தி உடல் மேன்மையை பெறுவீர்கள். அரசியலில் உங்களின் பதவிகளை தக்க வைத்து கொள்வீர்கள். புதிய அரசியல் நண்பர்கள் அறிமுகம் உங்களுக்கு ஊக்கம் பெற செய்யும். தனிபட்ட பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இளைய சகோதரர் உங்களின் தொழில் வளர்ச்சிக்கு பல உதவிகளை செய்வார். கலைத்துறையினர் பழைய நண்பர்கள் மூலம் சில வாய்ப்புகளை பெற்று வளம் பெறுவீர்கள். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவீர்கள். கணித பாடங்களில் சிறந்த வளர்ச்சியை எளிமையாக பெறுவீர்கள். லட்சியத்தை அடைய இதுவரை இருந்த தடைகளை நீக்கி வளர்ச்சியை பெறுவீர்கள். உங்களின் தூய்மையான மனத்திற்கு மக்களின் சக்தி மகத்துவமாக அமையும். 
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
வெண்மை, சிவப்பு, பச்சை.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
திங்கள், செவ்வாய், ஞாயிறு.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
06-09-2025 சனிக்கிழமை பகல் 11.46 முதல் 08-09-2025 திங்கள் மாலை 04.31 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை ராகு காலத்தில் காலை 09.00 - 10.30 பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு எள் கலந்த சாதம் நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்ள வளமான வாழ்க்கை மேம்படும்.