சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - மகரம்

சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - மகரம்

பிறருக்கு உதவி செய்வதில் அக்கறை எடுத்து கொள்ளும் மகர ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு ராசிநாதனும் தனஸ்தானாதிபதியுமான சனி பகவான் உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும், விரைய ஸ்தானத்தையும் பார்வை இடுவது தடைபட்ட கிடந்த காரியங்கள் இனி செயல்படதுவங்கும். எதை செய்தால் நல்லதோ அதை செயல்படுத்துவதில் ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இதுவரை நடந்த ஏழரை சனி விடுதலை பெறுகிறார்.
 
ராசிநாதனாகிய சனி பகவான் இதுவரையிலும் குடும்ப சனியாக இருந்து குடும்பத்தில் பல்வேறு பிரச்சனை வந்து நிம்மதியின்மை இருந்து வந்தது. இனி அதிலிருந்து விடுதலை பெறுவீர்கள். மற்றவருக்கு உதவும் பண்பு இயற்கையாக உங்களுக்கு இருக்கும். எனினும் நீங்கள் எதிர்பார்த்தபடி எல்லா காரியங்களும் சிறப்பாக அமையும். பொது விடயங்களில் நீங்கள் செயல்படும் விதம் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்கும். செய்யும் தொழிலில் வளர்ச்சியை பெறுவீர்கள். எந்த தொழிலாக இருந்தாலும் அதில் முதன்மை பெற வேண்டுமென்ற உங்களின் எண்ணம் உறுதி தன்மையால் விரைவில் நடக்கும். தொழிலாளர்களின் ஒற்றுமையை உறுதி செய்ய பாடுபடுவீர்கள். குறுகிய முதலீடுகளில் தொழில் செய்ய நல்ல லாபம் கிட்டும். அதிகமான நோக்கங்கள் சிறிது காலம் கழித்து செய்வது நல்லது.
 
உங்களின் விடாமுயற்சிகளுக்கு எப்பொழுதும் நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள். கல்வி அறிவு, கொண்ட கொள்கை மறுமலர்ச்சிகளில் முழுமையான நம்பிக்கை கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் வரும். அதற்கு தகுந்த முதலீடுகளை தெரிவு செய்ய தாமதம் ஆகும். இதனால் சில காலம் தள்ளிபோகும். இருப்பினும் விரைவில் நடக்கும். குடும்ப தகராறுகள் இனி முடிவுக்கு வரும். கருத்து வேறுபாடு நீங்கி, உங்களுடன் உறவுகள் இணைவார்கள். உங்களின் சாதுர்யமான பேச்சு மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தும். கலைத்துறையினர் நீங்கள் எதிர்பார்த்த பணிகள் விரைவில் நடத்தி காட்டுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு இனி நன்மையை தரும். வெளிநாடு சென்று வர முயற்சி எடுத்தால்.. அதற்கான பலன்கள் கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் இருப்பவருக்கு, முன்னணி நிறுவனத்தில் பணி செய்ய வாய்ப்பு அமையும்.
 
அரசியலில் விருப்பம் இல்லை என்றாலும் அதற்கான வாய்ப்பு தேடி வரும். உங்களின் பண்புகள் மற்றவருக்கு மிகவும் பிடிக்கும் எல்லோரிடமும் அனுசரித்து செல்வீர்கள். தன் கடமையை செய்வதில் எந்த குறுக்கிடும் இருக்க கூடாது என்று நினைப்பீர்கள். புதிய திட்டங்களை விரைவில் செயல்படுத்துவீர்கள். தாய் தந்தையரை கடைசி வரை காப்பாற்றுவீர்கள்.
 
பரிகாரங்கள்:
 
ஞாயிறு அன்று ராகு காலத்தில் (04.30 - 06.00) பைரவருக்கு 7 விளக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும், தயிர் அன்னம் நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்வதும் மிக சிறப்பாக உங்களின் வாழ்க்கை சூழ்நிலை அமைய பெறுவீர்கள்.