அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - விருச்சிகம்

அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - விருச்சிகம்

தெளிவான மனநிலையும். தைரியமும் கொண்ட விருச்சிக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாகவும் இலக்கை அடையும் தைரியத்தையும் தருவார். பாக்கியாதிபதி சந்திரன் பார்வை ராசிக்கு படுவது மிக சிறப்பான நற்பலனை பெற்று தருவார். உச்சம் பெற்ற குருவின் பார்வை மேலும் வளம் பெற வாய்ப்புகள் அமையும்.
 
சுகஸ்தானத்தில் ராகு அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவது மிகவும் முன்னேற்றமான காலமாக அமையும். வெளிநாட்டு தொடர்புகள், வேலை வாய்ப்பிற்காக முயற்சி செய்பவருக்கு அந்த வாய்ப்பு அமையும் எடுத்த காரியம் ஜெயிக்கும். தொட்ட காரியம் தொடரும். வெற்றியைத் தரும். பஞ்சம ஸ்தானத்தில் சனி அமர்ந்து குரு பார்வைபடுவதால், கெடுபலன் குறைந்து நன்மை உண்டாகும். 
 
குலதெய்வத்தின் அனுகிரகம் கிடைக்கும். முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். புனித யாத்திரை சென்று வர சிலருக்கு நல்ல சந்தர்ப்பம் அமையும். உங்களை இதுவரை வேடிக்கை பார்த்து வந்தவர்களுக்கு உங்களின் செயல்பாடுகளால் ஆச்சரியம் கொள்வார்கள். முறையான உங்களின் செயல்பாடுகள் எப்பொழுதும் நன்மையே செய்யும்.
 
பாக்கிய ஸ்தான சந்திரன் களத்திர ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிக பெரிய வளர்ச்சியையும், நன்மையும் தரும். உங்களின் யோகாதிபதி வீட்டில் செவ்வாய் ராசிநானுடன் குரு உச்சம் பெற்று இணைவு பெறுவது உங்களின் ஒவ்வொரு காரியமும் வெற்றியையும், மேன்மையும் பெறுவீர்கள். பொருளாதார பெருக்கமும். செய்யும் தொழிலில் வளர்ச்சியையும் பெற்று இலக்கை அடைவீர்கள். 
 
தொழில் ஸ்தானத்தில் கேது அமர்ந்து புதிய தொழில் வாய்ப்புகளை அமைத்து கொள்வீர்கள். தொழில் ஸ்தானாதிபதி லாபஸ்தானத்தில் அமர்வது உங்கள் வளர்ச்சிக்கு சரியான பாதையாக அமையும். விரையத்தில் விரையாதிபதி சுக்கிரனுடன் புதன் இணைவு பெறுவது கலைத்துறையினர் அடிக்கடி இரவு நேர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவாயை பெருக்கிக் கொள்வீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
ஆரஞ்சு, மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
செவ்வாய், வியாழன், ஞாயிறு.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
02-10-2026 வெள்ளி மாலை 06.37 முதல் 04-10-2026 ஞாயிறு இரவு 08.56 மணி வரையும்.
29-10-2026 வியாழன் இரவு 02.40 முதல் 01-11-2026 ஞாயிறு அதிகாலை 04.57 மணி வரையும்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரையும், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடும் செய்து தயிர் அன்னம் தானம் கொடுத்து உங்களின் வேண்டுதலை சொல்லி வர விரைவில் எல்லாம் வெற்றியாக அமையும்.