நவம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - மிதுனம்
பொறுமையும் சகிப்பு தன்மையும் கொண்டு விளங்கும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் தொழிலில் முன்னேற்றம் பெற செய்வார். உங்களின் தொழில் ஸ்தானாதிபதி குரு அதிசாரமாக தனஸ்தானத்தில் அமர்வதும் தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவதும் உங்களின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும். மூன்றாமிட கேது உங்களின் மனவலிமை பெறவும். உறுதியுடன் இருக்கவும் உதவி செய்வார்.
உங்களின் ராசிக்கு குரு அதிசார பெயர்ச்சி தொழிலிலும் உத்தியோகத்திலும் முன்னேற்றம் பெறவும் வேலை வாய்ப்பை உறுதி செய்யவும் உதவி செய்வார். சுகஸ்தானத்தில் சுக்கிரன் பரிவர்த்தனை யோகம் பெற்று வண்டி வாகன வசதிகளையும் வீடு வாங்க தேவையான உதவிகளை செய்வார். ஆறாமிடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பது மறைமுக எதிரகளை விரட்டி விடவும் மனதில் பயஉணர்வு முடிவுக்கு வரும் வரை நல்ல பலனையும் பெற செய்வார். திருமண காரியங்களில் உங்களால் ஆன உதவிகளை செய்வீர்கள். கலைத்துறையில் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்வதுடன் அடுத்த வரும். நிகழ்ச்சிகளுக்கும் வாய்ப்பை பெறுவீர்கள்.
கல்வி அறிவும், திறமையும் உங்களை ஊக்கப்படுத்தி தேர்வுகளில் நல்ல பெறுபேறு பெற மாணவர்கள் மேன்மை அடைவார்கள். சொந்த தொழிலில் அதிகமான கவனம் செலுத்தி நல்ல லாபம் பெறுவீர்கள். அரசு சார்ந்த பணியில் உங்களின் ஆலோசனைகள் நல்ல பயனுள்ளதாக அமையும். கேது மூன்றாம் பார்வையாக ராசியை பார்ப்பதும். செவ்வாய் எட்டாம் பார்வையாக ராசியை பார்ப்பதும் போட்டிகளில் சுறுசுறுப்பையும் மனதில் தைரியத்தையும் பெறுவீர்கள். கடன் தொல்லைகளில் படிப்படியாக விடுதலை பெறுவீர்கள். அரசியலில் சிறந்த ஆலோசராக இருந்து புகழ் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
25-11-2025 செவ்வாய் அதிகாலை 03.02 மணி முதல் 27-11-2025 வியாழன் காலை 10.49 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரின் வழிபாடும், சிவப்பு நிற பூ இலுப்பெண்ணெய் தீபமும் ஏற்றி உங்களின் வேண்டுதலை சொல்லி வர நீங்கள் நினைத்ததை அடைவீர்கள்.

















