ஜுலை மாத ராசி பலன்கள் 2026 - துலாம்
லட்சியத்தில் உறுதியுடன் நின்று செயல்பட்டு வெற்றி காணும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் அமர்ந்து சுகஸ்தானத்தை பார்வை இடுவது நல்ல பலன்களை பெற்று தரும். கைவினை பொருட்கள் உற்பத்தி விற்பனையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். தனியாக எதையும் செய்யாமல் சிலருடைய உதவியை நாடி செயல்படுவீர்கள். இதனால் உங்களின் ஆலோசனைகளும், நிலைபாடுகளும் சிறப்பாக அமையும். குடும்ப வளர்ச்சியே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு மேன்மையை அடைவீர்கள்.
தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் மூன்றில் அமர்ந்து லாபாதிபதி சூரியனை பார்வை இடுவதால் எந்த தொழில் செய்து வந்தாலும் அதில் நல்ல லாபம் பெறுவீர்கள். கலைத் துறையினர் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதனை திறம்பட செயல்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெறுவீர்கள். ஆன்மீகம் சார்ந்த சில காரியங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். சில நேரங்களில் படபடப்பாக இருப்பீர்கள். இதனால் மனஉளைச்சல் பெற்று, பின் அமைதியாக விடுவீர்கள்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்து தடைபட்ட காரியம் தாமதாகும் என்றாலும்.. எந்த காரியத்தையும் தொய்வின்றி செய்வீர்கள். முத்திரை பதித்தது போல் செயல்களை செய்து பலன் பெறுவீர்கள். எதிர்ப்புகள் மறையும். கண்டபடி செயல்பட்ட உங்களின் நண்பர்கள் உங்களை பார்த்து தங்களைத் திருத்திக் கொண்டு மீண்டும் இணைவார்கள். சிறுகடன்கள் பெருங்கடனாக மாற நீங்கள் இடம் கொடுக்காதீர்கள் செய்யும் தொழிலில் புதிய முதலீடுகள் செய்து வளப்படுத்துவதை சில காலம் தள்ளி போடுவது நல்லது. செய்யும் தொழிலை திறம்பட தக்கவைத்துக் கொண்டு செயல்படுவது சிறப்பு.
அட்டம ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து உங்களுக்கு தடுமாற்றத்தை கொடுத்தாலும் சரியான வழிமுறைகளோடு அதனை சரி செய்து கொள்வீர்கள். சாதனைகளை செய்ய வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும். கருத்து ஒற்றுமையை வலியுறுத்தி மந்தமான சூழ்நிலைகளை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். வசதிகளையும், வாய்ப்புகளையும் தவறாமல் கவனித்து பயன்படுத்திக் கொள்வீர்கள்.
பாக்கிய ஸ்தானத்தில் சூரியனும், புதனும் இணைவு பெற்று அமர்வது.. பேச்சாற்றல், எழுத்து ஆற்றல் மூலம் வேற்றுமை உணர்வு மறந்து நல்ல வளம் பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் குருவுடன், ராசிநாதன் சுக்கிரன் இணைவு பெறுவது தொழிலை கண்காணித்து வளம் பெறும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு தனக்கு மேல் இருக்கும் அதிகாரிகளின் மூலம் நல்ல பலனை அடைவீர்கள். தங்கம், வெள்ளி நகை வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல விற்பனை மூலம் ஆதாயம் பெறுவீர்கள். லாப ஸ்தானத்தில் கேது அமர்வது வெளிநாட்டு தொடர்புகள் மூலம் மேன்மை அடைவீர்கள். சுமையாக இது வரை இருந்த அனைத்தும் இனி சுகமாக அமையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, பலவர்ணம், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
10-07-2026 வெள்ளி மாலை 03.46 முதுல் 12-07-2026 ஞாயிறு மாலை 06.13 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து நெய் தீபம் ஏற்றி கந்தர் சஷ்ட கவசம் வாசித்து துவரை பருப்பு சாதம் நைவேத்தியம் வைத்து பக்தர்களுக்கு தானம் செய்து வர வேண்டிய அனைத்து காரியமும் தடையின்றி சிறப்பாக நடக்கும்.
















