ஜுலை மாத ராசி பலன்கள் 2026 - ரிஷபம்
மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிநாதன் மூன்றில் அமர்வதால் நலம் பெறுவீர்கள். தனஸ்தானாதிபதி புதன் ஆட்சி பெற்று அமைவதால் பொருளாதாரத்தில் மேன்மையை அடைவீர்கள். நினைத்த படி செயலில் இறங்கி வளம் பெற்று குறுகிய கால வளர்ச்சிக்கு வழிவகுப்பீர்கள். ஆன்மீகம் மற்றும் அரசியலில் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள்.
சுகஸ்தானாதிபதி சூரியன் தனஸ்தானத்தில் அமர்ந்து அட்டமஸ்தானத்தை பார்வை இடுவது சிலருக்கு உத்தியோகம் உறுதியாக கிடைக்கும். பொது நலன் கருதி நீங்கள் எடுக்கும் முடிவுகள் சிறப்பான பலனைப் பெற்று தரும். தனாதிபதி புதன் ஆட்சி பெற்று சூரியனுடன் இணைவு பெறுவது போட்டி தேர்வு …சவாலான சில வித பிரச்சனை… என அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும்.. பொங்கி வரும் வெள்ளம் போல உங்களின் செயல்பாடு வேகமாக அமையும். மூன்றாமிடத்தில் குரு அமர்ந்து லாப ஸ்தானத்தையும், சனியையும் பார்வை செய்வது கடமையிலிருந்து சிறிதும் தவறாமல் பணி செய்வீர்கள். எடுத்த காரியம் தடையின்றி நடக்கும்.
உங்களின் ராசிக்கு யோகாதிபதியான சனி கோச்சாரப்படி லாப ஸ்தானத்தில் வந்து அமர்வது இன்னும் சிறப்பு. எதிர்பாராத தனவரவும், உங்களின் முயற்சிக்கு கூடுதல் பலனும் அமையும். வரவுக்கு மீறிய சில செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். ராசிநாதன் சுக்கிரன் கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகளை பெற்று தருவார். நல்ல நடிப்பு துறையில் கைதேர்ந்து செயல்படுபவீர்கள். கேது சுகஸ்தானத்தில் அமர்வது உங்களின் காரியத்திற்கு சில தடைகளாக அமையும். சிறு உடல்நல குறைவு வந்து மறையும். வரவுக்குள் செலவு செய்ய பழகிக் கொள்வீர்கள்.
அட்டமஸ்தானத்தில் சந்திரன் அமர்வது தேவையற்ற விடயங்களை யோசித்து மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிவரும். வருவது வரட்டும் போவது போகட்டும் இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்று எண்ணி மனதில் துணிச்சலுடன் செயல்பட்டால் எல்லாம் சுபமாக அமையும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். தனியாக திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்ந்து இருப்பது அன்னிய தேசத் தொடர்புகளை உண்டாக்கும்.
வெளிநாட்டு நண்பருடன் இன்றைய நிலவரம் என்ன என்று அறிந்து செயல்படுவது நல்ல பலனை பெற்று தரும். அரசியலில் உங்களின் இலக்கை அடைவீர்கள். லாபஸ்தானத்தில் சனி அமர்ந்து உங்களின் ராசியை பார்வை இடுவது முன்னேற்ற பாதையில் செயல்பட துவங்குவீர்கள். எந்த தொழிலாக இருந்தாலும் போட்டியின்றி அதில் ஈடுபாடு கொண்டால் நினைத்ததை செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, பச்சை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
வெள்ளி, சனி, ஞாயிறு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
26-07-2026 ஞாயிறு 10.04 முதல் 28-07-2026 செவ்வாய் இரவு 09.35 மணி வரை..
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
திங்கள் கிழமை சிவன் கோவில் சென்று இலுப்பெண்ணெய் தீபம் போட்டு புளி சாதம் நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்ள வெகு விரைவில் எல்லா விதமான வேலைகளும் சிரமமின்றி செயல்படும்.
















