விடயம் எதுவாக இருந்தாலும் விரும்பி செய்யும் மேஷ வாசகர்களே!
இம்மாதம் உங்களின் பாக்கிய ஸ்தானத்தை சூரியன் பார்வை இடுவது சிறப்பான பலனாக அமையும். விரைய ஸ்தானத்தையும், விரைய சனியையும் குரு பார்வை இடுவதால் பாதிப்பு எதுவும் இருக்காது மூன்றில் சூரியன் அமர்ந்து கீர்த்தியை தருவார். எடுத்த காரியம் ஜெயம் நினைத்த காரியம் கைகூடும்.
ராசிநாதனே தனஸ்தானத்தில் அமர்வது நல்ல வளர்ச்சிக்கு வழிவகுக்கும். முன் மாதிரியான செயல்களை உண்டாகும். செய்யும் செயலிலும், எடுக்கும் முயற்சியும் கைகொடுக்கும். யாரை நம்பி செயல்பட்டீர்களோ அவர் கடைசியில் கைவிடுவார். எனினும் மனம் தளராமல் அதை முடிப்பீர்கள். பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு சிறு தான தர்மம் செய்யுங்கள். உங்களுக்கு நல்ல வளர்ச்சியை பெற்று தரும்.
சூரியன் மூன்றில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தை பார்வை இடுவது நல்ல சிறந்த நிர்வாக திறமை செயல்களில். உறுதியான முடிவு எடுத்தல், பேச்சில் கண்ணியம் எடுத்தல் தீர்க்கமான சொற்கள். நேர்மைக்கு துணை நின்று உதவுதல் இருக்கும். புதனுடன் சூரியன் இணைவது கணித மேதைகள் போல செயல்படும் திறன் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பு அமையும். நீங்கள் விரும்பிய பாடமே அமையும்.
சுகஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று சுக்கிரனுடன் இணைவு பெறுவதால் புதிய வாகனம் வாங்குதல் வீடு கட்டும் வாய்ப்பு அமையும். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். எதிர்ப்புகள் குறையும். பஞ்சமஸ்தானத்தில் கேது இருப்பது எந்த காரியத்திலும் தடையை ஏற்படுத்துவார். எனினும் நீங்கள் உறுதியுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். சுக ஸ்தானாதிபதி சந்திரன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்வது மிகவும் நல்ல காரியம் நிறைவேறும். லாபஸ்தானத்தில் ராகு அமர்வது தொழிலில் கூடுதல் முன்னேற்றம் உண்டாகும்.
குடும்ப ஒற்றுமைக்கு பாடுபடுவீர்கள். சுமையாக இருந்த சில காரியம் சிறப்பாக அமையும். நல்ல செல்வாக்கு உள்ள அன்பரின் நட்பு உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். பொது வாழ்வில் சமநிலையை அடைவீர்கள். பணியாளர்களுக்கு வேலை பளு அதிகம் இருக்கும். கலைத்துறையினர் சில நிகழ்ச்சி சிறப்பாக அமையும். முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு பாதுகாப்பு தரும். தேவைகளுக்கு பண வரவு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், புதன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
23-07-2026 வியாழன் இரவு 10.35 முதல் 26-07-2026 ஞாயிறு காலை 10.03 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் (காலை 09.00 - 10.30) பைரவர் வழிபாடு செய்து எட்டு மண் அகல் விளக்கு நல்லெண்ணெயில் எள் திரி போட்டு தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள சனியின் பாதிப்பு குறையும். எடுத்த காரியத்தில் வெற்றியை தரும்.
















