குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - கும்பம்

குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - கும்பம்

துணிச்சலும், தைரியமும் கொண்டு விளங்கும் கும்ப ராசி வாசகர்களே!
 
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காமிடத்தில் இருந்த குரு இனிவரும் 11-05-2025 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் ராசியை பார்ப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொள்வீர்கள். தைரியமும் துணிச்சலும் உங்களின் வாழ்வில் வளம் பெற செய்யும்.
 
ஏற்கனவே ராசியில் ராசிநாதனுடன் ராகு இணைவு பெற்றிருப்பதும் குரு பார்வையால் ஸ்தான பலம் பெறுவதால் உடல்நலனில் நல்ல முன்னேற்றமும் எடுத்த காரியம் வெற்றியும் வேண்டாத விடயங்களை தவிர்த்து மேலும் நற்பலன்களை பெறுவீர்கள். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் காலமாக இது அமையும். பணபுழக்கம் நன்றாக இருக்கும்.
 
பாக்கியஸ்தானத்தை குரு பார்ப்பதால் புனித யாத்திரை சென்று வருதல் நல்ல படியாக தொழில் செய்யவும். ஏற்கனவே இருக்கும் தொழிலை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு அமையும். கொடுத்த வாக்குறுதிகளையும், செயல்களையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உங்களின் மேன்மை அடைய செய்யும்.
 
லாபஸ்தானத்தை குரு பார்வை இடுவதால் செய்யும் தொழிலிலும், வேறு வழிகளிலும் உங்களுக்கு பணபுழக்கம் இருக்கும் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட பலன்கள் உண்டாகும். காத்திருந்து செயல்படுவது போல வாய்ப்பு தேடி வந்து உங்களை ஊக்கபடுத்தும். நினைத்த காரியம் கைகூடும்.
 
உடல்நலனின் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய திட்டங்களில் இனி முழு கவனம் செலுத்தி நன்மை அடைவீர்கள். 08-06-2025 முதல் 08-07-2025 வரை சற்று கவனமாக இருப்பது நல்லது எதையும் யோசித்து செயல்படவும்.

பரிகாரங்கள்:
 
வியாழக்கிழமைகளில் பைரவருக்கு தேங்காய் உடைத்து அதில் நெய் தீபம் ஏற்றி அரளி பூ மாலை போட்டு வேண்டிக் கொள்ள சகல காரியமும் அனுகூலமாக அமையும்.