ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் - 2026 - துலாம்
உழைப்பும் உறுதியும் கொள்கையாக கொண்டு விளங்கும் துலாம் வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் லாபஸ்தானத்தில் அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் எண்ணம் நிறைவேறும் எடுத்த காரியம் சிறப்பாக அமையும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். செய்யும் தொழிலை நேசித்து செயல்பட்டு வளம் பெறுவீர்கள். ஆறாமிடசனி ஆறுதலை தருவார். கடவுள் நம்பிக்கையும், வழிபாடும் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
உங்களின் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் ராகுவுடன் அமர்வது செய்யும் தொழிலில் போட்டிகளை வென்று நல்ல லாபம் பெறுவீர்கள். கடந்த கால கஷ்டங்கள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தை கெடுத்தாலும் ராசிநாதன் சுக்கிரன் பார்வையால் எந்த விதமான பிரச்சனையுமின்றி சுபிட்சம் பெறுவீர்கள். ஆன்மீகத்தின் மீது அதிக நம்பிக்கை உண்டாகும்.
உங்களின் குலதெய்வத்தின் அனுகிரகம் கிடைக்கும். பெயரளவில் நீங்கள் செயல்பட்டாலும் உங்களின் செயல்களில் உருக்கமான நிகழ்வுகள் இனி இருக்கும். உறவுகளிடம் மிகுந்த அன்பு செலுத்துவீர்கள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணுவீர்கள். குடும்ப பொறுப்பு மிகவும் கவனமுடன் செய்து அனைவருக்கும் அன்பு மழை பொழிய செய்வீர்கள். மருத்துவ துறையில் பணிபுரிபவருக்கு விரைவில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
ஆறாமித்தில் சனி அமர்ந்து மறைவுஸ்தானங்களை பார்வை இடுவது உங்களுக்கு நன்மையே செய்யும் உங்களின் எட்டாமிடத்தையும் விரையஸ்தானத்தையும், மூன்றாமிடத்தை சனி பார்வை இடுவதால் சனி பார்க்கும் இடம் பாழாக போகும் என்பதால் கெடுபலன் தரக்கூடிய இடம் சனியால் பலவீனப்பட்டு விட்டால் தேவையற்ற செலவுகள் குறையும். தனித்தன்மையுடன் இருப்பீர்கள். பிறருக்கு உதவி செயல்வதையே கொள்கையாக கொண்டு விளங்குவீர்கள். உங்களுக்கென்று சில கோட்பாடுகளை வைத்து அதனை செயல்படுத்து வீர்கள்.
களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் எட்டில் மறைவு பெறுவது திருமண தடையை உண்டாக்கும். உங்களின் தொழில் ஸ்தானத்தில் சூரியனுடன் புதனும் குருவும் அமர்ந்து செய்யும் தொழிலில் மேன்மை அடையசெய்வார்கள். குரு உங்களின் தனஸ்தானத்தை பார்வை இடுவதால் பொருளாதாரத்தில் தன் நிறைவு பெறுவீர்கள். குளிர்பானம் நீர்வளம் சார்ந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களின் கூட்டுத்தொழிலை காட்டிலிலும் தனியாக செய்யும் தொழில் சிறப்பாக அமையும். வரவுக்குள் செலவு செய்வீர்கள். உங்களுக்கு என்ன தோன்று இன்றதோ அதையே செய்து வருவீர்கள். சுக்கிரன் லாபஸ்தானத்தின் நன்மையே உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, பலவர்ணம், நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
06-08-2026 வியாழன் இரவு 11.59 முதல் 08-08-2026 சனிக்கிழமை இரவு 02.26 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு பூ மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி துவரம் பருப்பு அன்னம் வைத்து வழிபட்டு வேண்டுதலை சொல்லி வர வேண்டிய வரம் விரைவில் நடக்கும். பொருளாதாரம் பெருகும்.
















