2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - விருச்சிகம்

2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - விருச்சிகம்

தன்னால் முடியும் என்று எதையும் சாதித்துக் காட்டும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஆண்டு முற்பகுதியில் நினைத்தபடி செயல்படுவீர்கள். அடுத்த பிற்பகுதியில் புதிய சில முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இது பற்றி சுய ஜாதக அமைப்பை பற்றி தெரிந்து தொழில் துவங்குவது நல்லது. உங்களின் தொழில் ஸ்தானாதிபதி சூரியன் தனஸ்தானத்தில் துவக்கத்தில் இருப்பதால் இருக்கும். தொழிலில் வளர்ச்சியை பெறுவீர்கள்.
 
உங்களின் ஆசை வார்த்தைகளை பேசி இது நல்லது அது நல்லது என்று சொல்லி வருபவர்களை நம்பி முதலீடு போடாமல் ஆய்வு செய்து அதன் பின்பு முடிவெடுங்கள். உங்களுக்கு தற்சமயம் அர்த்தாஷ்டம சனியால் பத்தாம் பார்வையாக சனி ராசியை பார்ப்பது குரு பார்வை இருக்கும் வரை எந்த பாதிப்பையும் தராது. குரு வரும் மே மாதம் பெயர்ச்சியாகும் போது உங்களின் பலம் குறையும் போத பிடிவாதத்தை குறைத்துக் கொண்டு எல்லோரிடமும் அனுசரித்து நடந்து கொள்ளும் போது நற்பலன்களை பெறுவீர்கள்.
 
விளையாட்டு துறையிலும் கலைத்துறையிலும் சிலருக்கு சாதித்து காட்டும்படி அமையும். ஒரு சிலருக்கு மறுமணம் நடக்கும். புனிதமான உங்களின் ஆன்மீக பயணம் சிறப்பாக அமையும். உங்களின் ராசிநாதன் செவ்வாய் உங்களுக்கு பயணத்தை சிறப்பாக நடத்தி கொடுப்பார். தயார் உடல் நலனின் கவனம் nசலுத்த வே்ணடி வரும். அடிக்கடி உடல் நல குறைவு உண்டாகும். 
 
புதிய நண்பர்கள் பழக்கம் உண்டாகும். புதிய அனுபவங்களை பற்றி தெரிந்து கொள்வீர்கள். எதை செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கும்படி செய்வீர்கள். சாதனைகளை செய்ய துடித்து கொண்டிருப்வர்களுக்கு வாய்ப்புகள் அமையும். அதனை பயன்படுத்தி கொள்வீர்கள். லாபஸ்தானத்தில் கேது அமர்ந்து உங்களுக்கு பல நல்ல காரியத்தை நடத்தி தருவார். இந்த ஆண்டு உங்களின் வாழ்வில் புதிய அனுபவத்தை பெற்று தரும்.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
3, 9, 5.
 
அதிர்ஷ்ட மாதங்கள்:
 
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், மே, ஜுலை, செப்டம்பர், டிசம்பர்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு.
 
பரிகாரங்கள்:
 
ஞாயிறு மாலை ராகு காலத்தில் தொடர்ந்து மூன்று நல்லெண்ணெய் தீபம் பைரவருக்கு ஏற்றி வழிபாடு செய்து சூலத்தில் மூன்று எலுமிச்சம்பழத்தை குத்தி வேண்டிக் கொள்ள சகல காரியமும் நினைத்தபடி நடக்கும்.