2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - ரிஷபம்

அனைவரும் இனிமையாக பேசி செயலில் இறங்கும் ரிஷபராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுக்கிரன் உங்களின் யோகதிபதி சனியுடன் தொழில்ஸ்தானத்தில் அமர்வதும் பஞசமாதிபதி புதன் பார்வை ராசியில் அமைவதும் செய்யும் தொழில் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். உடன் இருக்கும் தொழிளார்களின் ஒத்துழைப்பதும் நல்ல நண்பர்களின் உதவியுடனும் செயல்படுவீர்கள்.
ஜெனம் குருவால் சில காலம் மனரீதியான பிரச்சனைகள் வந்து மறையும் வரும் மே மாதத்திற்கு பின்பு தனஸ்தானத்தில் குரு அமரும் போது நல்ல வளமான சூழ்நிலை உருவாகும். லாபஸ்தானத்தில் ராகு அமர்வது புதிய தொழில் வாய்புகள் சிலருக்கு அமையும். ஆன்லைன் வர்த்தக வாய்ப்பு சிலருக்கு உண்டாகும்.
அரசியலில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சகோதர்களின் மூலம் சிலரின் மனநிலை சரியாகமல் போகும். உடல் நலனின் கவனம் செலுத்தி ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்து கொள்வீர்கள். பொது வாழ்வி்ல் சிலருக்கு ஆரவம் மிகுந்து செயல்படுவீர்கள். மாற்றங்களை எதிரபார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் விரைவில் கிடைக்க பெறுவீர்கள்.
பெண்களுக்கு திடீர் பண வரவுகள் கிடைக்க பெறுவீர்கள். காலமாற்றத்திற்கு தகுந்தபடி உங்களின் சூழ்நிலைகளை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். விவாசயத்தில் விளைச்சல் நன்றாக இருக்கும் பால் வளம் நன்மையைத் தரும். எதிரிகளிடமிருந்து சில காலம் தள்ளி இருப்பது நல்லது விவேகமும் உங்களை வெற்றி பெறச் செய்யும் என்பதால் இந்த ஆண்டு முழுவதும் காரியத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட மாதம் :
பிப்ரவரி, மார்ச், மே, ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர்,
அதிர்ஷ்ட எண்கள் :
3, 4, 6, 8,
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, நீலம், மஞ்சள்.
பரிகாரங்கள்:
வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் மாகலெட்சுமி ஸ்லோகம் சொல்லி நெய் தீபமேற்றி தாமரை பூ வைத்து தொடர்ந்து வேண்டிக்கொள்ள சகல விதமான காரியமும் கைகூடும்.