2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - கன்னி

2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - கன்னி

தன் கடமை செய்து தன் நிலையை உணர்ந்து செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பார்வை மே மாதம் வரை இருப்பதால் உங்களின் காரியங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன்களை கிடைக்கும். சாதிக்க நினைத்து நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். எந்த காரியமாக இருந்தாலும் அதில் அவசரமின்றி செயல்படுவதன் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெறுவீர்கள்.
 
தொழிலில் உங்களின் கவனம் சிறப்பாக இருக்கும் அதிக படியான முன்னேற்றங்களையும் வளர்ச்சியையும் ஆண்டு முற்பகுதியில் செய்து வருவீர்கள். பின்பு தொழிலில் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிலையற்ற தன்மை உண்டாகும். அதுபோல உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் கவனமின்மையால் சில பாதிப்புகள் வரலாம் என்பதால் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.
 
அதிகாரத்தில் இருப்பவர் தனக்கு மேல் மேல் உள்ளவருக்கு பதில் சொல்லும் நிலை உண்டாகும். ஜோதிடத்தை தொழிலாக பார்ப்பவர்களுக்கு சில சங்கடங்களில் இருக்க வேண்டிவரும். உங்களின் ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் இருப்பது உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களின் அறிவாற்றலால் எத்தகைய பிரச்சனையும் ஜெயித்து விடுவீர்கள்.
 
உங்களுக்கு மிக நெருக்கமானகர்களிடம் எதையும் மனம் திறந்து உங்களின் ரகசிய விசயங்களை சொல்லிவிடாதீர்கள். அதனால் உங்களுக்கு சில பாதிப்பு உண்டாகலாம். கலைஞர்களின் வாழ்வில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்களின் தொடர் முயற்சிகளுக்கு நல்லபலன் கிடைக்கும். 
 
நீங்கள் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காண்பீர்களே அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமையும். சொந்த காலில் இருக்க விரும்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு அமையும் அதை பயன்படுத்தி முன்னேற்றம் காணுங்கள். மொத்ததில் இந்த ஆண்டு உங்களின் வளர்ச்சி பொருளாதார நிலையில் தன்னிறை உண்டாகும்.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
5, 6, 3, 9.
 
அதிர்ஷ்ட மாதங்கள்:
 
பிப்ரவரி, மார்ச், ஜுன், ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
பச்சை, மஞ்சள், நீலம்.
 
பரிகாரங்கள்:
 
வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு வெள்ளை நிற பூ வைத்து நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ளவும், ஞாயிறு தோறும் ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர சகல காரியமும் சிறப்பாக அமையும்.