2025 - 2026 ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - தனுசு

திடமான நம்பிக்கையும், கொள்கையும் கொண்டு விளங்கும் தனுசு ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு சுகஸ்தானத்தில் அமர்ந்த ராகு இனி மூன்றாமிடத்திலும் தொழில் ஸ்தானத்திலிருந்து இனி பாக்கியஸ்தானத்திலும் அமர்வது வரும் 26-04-2025 முதல் உங்களுக்கு நற்பலன்களை தொடர்ந்து வழங்குவார்கள்.
முயற்சி ஸ்தானத்தில் ராகு அமர்ந்து உங்களின் ராசியை பார்வை இடுவதும் சனியுடன் இணைவு பெறுவதும் உங்களுக்கு சிறப்பான நல்ல பலன்களை பெற்று தருவார்கள். நல்ல வேலையும், வருமானமும் கிடைக்கப் பெறுவீர்கள். பொது வாழ்விலும், அரசியலிலும் உங்களின் செல்வாக்கு உயரும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். காலத்தையும் நேரத்தை வீணடிக்காமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு நன்மையை பெறு வீர்கள். செய்யும் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெறுவீர்கள்.
பாக்கியஸ்தானத்தில் கேது யோகாதிபதியான சூரியன் வீட்டில் அமர்வது உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஒன்பதாம் இடத்தில் அமரும் கிரகம் கெடுபலன்களை தராது என்பது சோதிட விதி என்பதால் பெரும்பாலும் கேதுவால் கூடுதல் நன்மையே உண்டாகும். அரசாங்கத்தின் சலுகைகளை பெறுதல். அரசியலில் உன்னதமான நிலையை அடைதல். தொழில் இல்லாதவருக்கு நல்ல தொழில் அமைவது போன்ற வாய்ப்புகள் அமையும். குரு பார்வை ராசிக்கு பெறும் போது சனி / ராகு இருவரையும் குரு பார்ப்பதும் லாபஸ்தானத்தை குரு பார்வை இடும் போது சிறப்பான வளர்ச்சிகளைப் பெறுவீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
பரிகாரங்கள்:
ஆஞ்சநேயர் வழிபாடு செய்து செந்தூரம் சாற்றி வேண்டுதல் செய்வதும், பிரதோச காலத்தில் நந்தி வழிபாடு செய்வதும், உங்களின் தொழில் உத்தியோகத்தில் வளம் பெற செய்யும்.