ருத்திராக்ஷம் மணிகளை அணிய வேண்டிய காலங்கள்

ருத்திராக்ஷம் மணிகளை அணிய வேண்டிய காலங்கள்

வேத பாராயணம், வேதம் கற்றல், சிவநாம ஜெபம், சந்தியா வந்தனம், வேதம் ஓதுதல், சிவபூஜை, சிவ புராணம் வாசித்தல், ஓதுவதை கேட்டல், சிவ ஜெப தியானம், சிவாலய தரிசனம், தேவார திருவாசகம், சிவதலங்களை தரிசிக்கும் சமயம், புனித தீர்த்தங்களில் நீராடல், விரத காலம், இறந்தவர்கள் நினைவு நாளில் சீரார்த்தம் சடங்குகள் செய்யும் காலம்.  புனித விழா காலங்களில் ருத்திராக்ஷம் மணிகளை அணியலாம்.

ருத்திராக்ஷம் மணிகளை அணியக் கூடாத காலங்கள்

குழந்தை பிறந்த தீட்டு, மரணமடைந்த தீட்டு, மாதவிலக்கு தீட்டு, குஷ்டம் போன்ற பெரு வியாதி காலம், தாம்பத்திய உறவு காலம், மலம் கழிக்கும் காலம், தூங்கும் சமயங்களில் ருத்திராக்ஷம் மணிகளை கழற்றி வைத்து விட வேண்டும்.  கழற்றிய மணியை அணியும்போது சிவநாமம் சொல்லி அணிய வேண்டும்.

ருத்திராக்ஷ மணிகளை பெண்களும் அணியலாம்

பெண்களின் தெய்வமாக விளங்கும் ஷ்ரீ ஆதிபராசக்தி தமுத்திலிருத்திராகளம் அணிந்திருப்பாள். திருவண்ணாமலை தல புராணத்தில் அருணாசல புராணம் என்ற அரிய நூலில் உண்ணாமுலை அம்மை காதில் ருத்திராக்ஷம் அணிந்து ஜெபம் செய்ததாக புராணம் கூறுகிறது. திருவானை காவல் ஷ்ரீ அகிளாண்டேஸ்வரி அட்சமணி அணிந்த தாகவும், அகிளாண்டநாயகி ஆராதணைபடலம் பாடல் 68ல் குறிப்பிட்டுள்ளது. பிரம்மக்கரியம், கிரஹஸ்தாஸ்ரமம். வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற ஆஸ்ரம வாழ்க்கை வாழ்ந்த பெண்கள் ருத்திராக்ஷ மணி அணிந்ததாக புராண வரலாறுகள் குறிப்பிட்டுள்ளது. இளம் வயதில் சிறிய ருத்திராக்ஷ மணி மாலைகளையும். வயது முதிர்ந்தவர்கள் பெரிய ருத்திராக்ஷ மணிகளையும் அணியலாம்.

ருத்திராக்ஷ மாலை ஜபம் செய்யும் திசைகளின் பலன்கள்

தெய்வங்களில் சிறந்தவர் பரமகிலுன். புருஷர்களில் சிறந்தவர் விஷ்ணு கிரஹங்களில் சிறந்தவர் நாயகி. பசுவில் சிறந்தது காமதேனு ருதிசையில் சிறந்தது உச்சை சிரவம் யானையில் சிறந்தது ஐராவதம் விருஷங்களில் சிறந்தது கற்பக விருக்ஷம் புற்களில் சிறந்தது அருகம்புல் வேதங்களில் சிறந்தது ரிக்வேதம் மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மத்திரம். மருந்துகளில் சிறந்தது அமிர்தம் உருவாகங்களில் சிறந்தது தஸ்தம். நபரத்தின்ஙகளில் சிறந்தது வைரம் அதுபோல மணி மாலைகளில் சிறந்தது ருத்திராக்ஷ மணி மாலையாகும்.