பூர்வ ஜென்ம பாவம் போக்கும் \"நவபாஷாண\" திருத்தலம்

பூர்வ ஜென்ம பாவம் போக்கும் \

சீதாதேவி இராவணனால் கடத்திச் செல்லப்பட்டு, இலங்கையில் சிறை வைக்கப்பட்டாள். அவரை மீட்க, இராமபிரான் தென் திசை வருகிறார். சாஸ்திரங்களில் எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்பும் விநாயகர் பூஜை, நவகிரக பூஜை செய்வது வழக்கம். அதன்படி, இராமபிரான் உப்பூரில் உள்ள விநாயகரைப் பூஜித்தார். பிறகு, தேவிப்பட்டினம் கடற்கரையில் அமர்ந்து, மணலை ஒன்பது பிடி எடுத்துப் பிரதிஷ்டை செய்தார். அந்தச் சமயத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. உடனே இராமபிரான் தன் திருக்கரத்தை உயர்த்த கடல் அமைதியானது. அந்த ஒன்பது கற்களாக “நவபாஷாணம்” என்ற பெயரில் நவகிரகங்களாக வழிபடப்படுகிறது. பிற ஸ்தலங்களில் நவகிரகங்கள் காட்சி தருகிறார்கள். பாஷாணம் என்றால் கல் என்று பொருள்படும். இந்த ஒன்பது கிரகங்களும் கடலுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நவகிரகங்கள் உள்ள இத்தலத்தில் நீராடினால், மிகவும் புண்ணியம் சேரும்.

 
நமது பூர்வ ஜென்ம பாவங்கள் விலகி, முன்னோர்களின் ஆசியைப் பெற இது மிகவும் ஏற்ற ஸ்தலம். இந்த ஒன்பது கிரகங்களையும் நவதானியங்கள் வைத்து வழிபட்டால், சகல நற்பலன்களும் கிடைக்கும். 
 
இராமபிரானே பிரதிஷ்டை செய்த நவகிரகங்களாக இருப்பதால், மிகவும் சிறப்பான ஸ்தலம். இங்கு தான் இராமபிரானுக்குச் சனி தோசம் நீங்கியது. பக்தர்களே நேரடியாக நவகிரகங்களுக்கு அபிசேகம் செய்யலாம். 
 
இந்த ஸ்தலத்தைத் தரிசித்தாலே பூர்வ ஜென்ம வினை, பாவங்கள் நீங்கும் நவகிரகங்களில் எந்தக் கிரகங்களால் தோசம் இருந்தாலும், அவை நீங்கி விடும். நவகிரகங்களை வழிபடுபவர்கள். அருகிலுள்ள கடலடைந்த பெருமாள் ஆலயம் சென்று வழிபட்டால்தான் முழுப் பலன் கிடைக்கும்.
 
வழித்தடம்: இராமாநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
- K.துரைராஜ்

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!