சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - மிதுனம்

சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - மிதுனம்

ஆற்றலும், மனவலிமையும் கொண்டு விளங்கும் மிதுன ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு அட்டம, பாக்கியாதிபதியான சனி பகவான் உங்களின் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து விரைய ஸ்தானத்தையும், சுக ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் கேந்திரம் பலம் பெறும் சூழ்நிலை அமையும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வரவுக்கு தகுந்த செலவுகளை செய்து உங்களின் வாழ்க்கையை மாற்றி கொள்வீர்கள்.
 
இதுவரை பல காரியம் சுமையாக இருந்த நிலைமாறி நன்மை பெறுவீர்கள். கடந்த கால கசப்பான அனுபவங்கள் உங்களை விட்டு போகும். நினைத்ததை நினைத்த நேரத்திற்கு அடையும் படி உங்களின் செயல்கள் இருக்கும். பல தொழில்களில் ஈடுபட்டு வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை பெறுவீர்கள். அரசியலிலும், பொது நலனிலும் சில மாற்றங்களை கொண்டு வரமுயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
 
எமது குடும்பத்தில் அனைத்து சலுகையும் கிடைக்கும் என்று நினைத்து செயல்படும் செயல்களில் வெற்றியை பெறுவீர்கள். கலைதுறையினருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. உங்களை வெறுத்து ஒதுக்கியவர்களை மீண்டும் ஏற்று கொள்ளும் சூழ்நிலை அமையும். உங்களின் உறுதியான மனவலிமை உங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். அரசு சார்ந்த சில விடயங்களில் கையாளும் போது… நீங்கள் தரும் ஆலோசனைகள் நல்ல பலனை பெற்று தரும். நீண்ட நாள் கடன்களில் சில தொகைகளை கட்டி குறைத்து கொள்வீர்கள். நல்ல பணியாளர்களுக்கு சரியான பரிகாரம் கிடைக்க பெறுவீர்கள். வாகனம் வாங்கி ஓட்ட நினைப்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும். சரியான ஆசான் கிடைக்க பெற்று, பல உன்னதமான பயிற்சிகளை பெறுவீர்கள். காரியத்தை சரியான காலத்தில் செய்து நல்ல பலன்களை அடைவீர்கள். பொருளாதார நன்றாக இருக்கும்.
 
வெளிநாடு செல்ல நினைத்து நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு தெரிந்த மொழியை தவிர பிற மொழிகளையும் கற்று கொள்வீர்கள். முதலீடுகள் இல்லாத தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
 
பரிகாரங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெற்றிலை மாலை சாற்றி செந்தூரம் = நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள, அனைத்து காரியங்களும் நன்மையை தரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.