அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - ரிஷபம்

சோதனை காலங்களில் துணிச்சலுடன் செயல்படும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு அமர்ந்தும் சுகஸ்தானத்தில் ராசிநாதன் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்ப்பது உங்களின் தொழிலில் இருந்த தடைகளை நீக்கி வளம் பெறுவீர்கள். யாரையும் நம்பி கொண்டிருக்காமல் சரியான பாதையை தெரிவு செய்து பயணம் செய்வீர்கள்.
சுகஸ்தானாதிபதி சூரியன் பஞ்சமாதிபதி வீட்டில் அமர்வதும் லாபஸ்தானத்தை பார்ப்பதும் அரசு துறையில் பணிபுரிபவருக்கு அதிகார மாற்றம் உண்டாகும். சிலருக்கு காலியிடங்களில் தகுதி அடிப்படையின்றி அந்த சில பொறுப்புகளை ஏற்று செய்ய வேண்டி இருக்கும். உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு தகுந்தபடி பதவிகள் கிடைக்கும். எதையும் கூட்டு முயற்சி மூலம் தெளிவாக செய்து முடிப்பீர்கள்.
தொழில் ஸ்தானத்தில் சனியுடன் ராகு இணைந்திருந்து குரு பார்வை பெறுவதால் சில தொழில்களில் இருந்த தடைகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமான உத்தரவு பெற வாய்ப்பு அமையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல அறிமுகம் கிடைக்கும். புதிய சந்திப்புகள் மூலம் வாய்ப்புகளை பெறுவீர்கள். சிலருக்கு இதுவரை இருந்த தொழிலாளர் பிரச்சனைகள் இனி முடிவுக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் மத்தியில் நல்ல அபிப்பிராயம் இருக்கும். உங்களை நன்கு புரிந்து கொண்டு உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணபுழக்கம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
26-10-2025 ஞாயிறு காலை 09.33 முதல் 28-10-2025 செவ்வாய் இரவு 07.30 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து துவரை அன்னம் நைவேத்தியம் செய்து நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் நினைத்தபடி கைகூடும்.