அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - மகரம்

சொல்லியபடி செய்து கட்டும் குணம் கொண்ட மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சனி தனஸ்தானத்தில் அமர்ந்து யோகாதிபதி சுக்கிரன் பார்வை பெறுவது உங்களின் தொழில், உத்தியோகம் சிறக்க வழி கிடைக்கும் தரும். வளமையுடன் செயல்பட்டால் எல்லாம் சிறப்பாக அமையும். எதிலும் முன்யோசனையும் துணிச்சலும் கொண்டு செயல்படுவது நல்லது.
உங்களின் தொழில் ஸ்தானத்தில் செவ்வாயும் புதன் இணைவு பெறுவதும் போட்டிகளை சந்திக்கும் நிலை உண்டாகும். லாபத்தை கருதாமல் வியாபாரம் நடக்க வேண்டுமென்று நிலைத்து விற்பனையை அதிகபடுத்துவீர்கள். உழைப்பவருக்கு முக்கியத்துவம் தந்து வளம் பெற செய்ய உதவிகளை செய்வீர்கள். மற்றவருக்கு உதவும் குணம் கொண்ட உங்களின் பண்பு பாராட்டும்படி அமையும். கற்பனை செய்தபடி வாழ்ந்து வந்த உங்களின் வாழ்க்கையில் இனி நீச ஸ்தானத்தில் கேதுவுடன் சுக்கிரன் இருப்பதால் பெண்களிடம் பழகும் போது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
உங்களின் எண்ணம் போல தர்மங்கள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கோவில்களிலும், பொது விழாக்களிலும் உங்களின் சார்பில் வழங்கப்படும் அன்னதானம் பிறருக்கு ஆச்சரியத்தை உண்டாக்கும். முன்ஜென்ம கர்ம பாவங்களை நீக்கி கொள்ள புனித பார்வை ராசிக்கு வருவதால் செயல்பாடுகளில் உச்சமான பலன்களை இம்மாத இறுதியில் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்க பெறும். சிலருக்கு அதிகபடியான செலவுகள் வரும். முதலீடு இல்லாத தொழில் செய்பவருக்கு நல்ல லாபம் கிட்டும். இதுவரை பட்ட துன்பம் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். எதிர்காலத்தில் ஏற்றம் பெறுவீர்கள். மருத்துவ காப்பீடு செய்து கொள்வீர்கள். வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மெரூன் கலர், பச்சை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, ஞாயிறு, புதன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
16-10-2025 வியாழன் மாலை 05.08 முதல் 18-10-2025 சனி இரவு 12.37 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழன், வெள்ளி, கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்து அருகு மாலை, எருக்கு மாலை அணிவித்து இரண்டு தேங்காய் எண்ணெய் தீபமிட்டு, அரிசி மாவு பிட்டு செய்து, வேண்டி கொள்ள சகல காரியமும் அனுகூலமாகும்.