ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - சிம்மம்
தைரியமும், துணிச்சலும் கொண்டு விளங்கும் சிம்ம ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு மூன்று பெயர்ச்சிகள் வருவது 06.03.2026 சனி அட்டம சனியாகவும் 26.05.2026 குரு விரைய குருவாகவும், 13.11.2026 ராகு / கேது ஆறு பனிரெண்டிலும் வருகிறார்கள். இதில் குருவின் பெயர்ச்சியும் ராகு/ கேது பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமாக அமைகிறது. சனி அட்டம சனியாக வருவது சற்று சவால்களை அடைய வேண்டி வரும்.
எதை பற்றியும் கவலைபடாமல் செயல்படும் உங்களின் மன வலிமை உங்களை ஊக்கபடுத்தும். ராசிக்கு ஐந்து, எட்டாமிட அதிபதி குரு விரையத்தில் வந்து அமரும் போது எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட பலன்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட பலன்களை பெற சற்று சிரமம் இருந்தாலும் கிடைக்கப் பெறுவீர்கள். அதேபோல முதல் சுற்றில் சனி ஆறு மற்றும் சனி எட்டில் அமர்வது எந்த கெடுபலன்களையும் தருவது இல்லை. எதிரிகளின் பலம் அதிகரித்தாலும் உங்களின் பலம் அதனை எதிர்கொள்ளும் மனதைரியத்தை தரும். பிற்பகுதி இந்த ஆண்டு இல்லை என்பதால் சனி இந்த ஆண்டு உங்களுக்கு நற்பலனைகளையே தருவார்.
குரு ஆரம்பத்தில் கெடுபலன்களை தந்து எதிர்பாராத செலவுகளையும் தங்க நகைகளை அடவு வைப்பதும் தங்க நகைகள் தங்காமல் போகும். நவம்பரில் கேது குருவுடன் இணையும் போது நல்ல அதிர்ஷ்ட பலன்களை பெறுவீர்கள். எடுத்த காரியம் வெற்றியை தரும். பொருளாதார வளர்ச்சி மிகவும் சிறப்பாக அமையும். உங்களின் ராசிநாதன் சூரியன், சனி நட்சத்திரங்களில் பயணம் செய்யும் போது சற்று சவால்களை சந்திக்க வேண்டி வரும். இனி பொதுவான அரசியல் பணிகளில் உங்களின் வளர்ச்சி மேன்மை பெற்று தரும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, ஆரஞ்சு, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்:
1, 6, 9.
அதிர்ஷ்ட மாதம்:
ஜனவரி, ஜுன், செப்டம்பர், நவம்பர்.
பரிகாரங்கள்:
ஞாயிறுகிழமைகளில் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனுக்கு விளக்கு போட்டு வருவதும். அடிக்கடி விநாயகர் வழிபாடு செய்வதும் உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும்.

















