ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - ரிஷபம்

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - ரிஷபம்

எதையும் யோசித்து காலம் அறிந்து செயல்படும் ரிஷப ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுக்கிரன் அட்டம ஸ்தானத்தில் அமர்வதும், குரு ஆரம்பத்தில் தனஸ்தானத்திலும் மே மாதம் முதல் மூன்றாமிடத்திலும் சனி லாபஸ்தானத்திலும் அமர்வதும் உங்களின் வாழ்வில் இன்ப துன்பம் கலந்தே இருக்கும். நினைத்ததை அடைய சில நேரம் கடும்சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும்.
 
ராசியில் சந்திரன் உச்சம் பெற்று அமர்வது உங்களின் அரசியல் வாழ்வில் இருக்கும் பதவிகளை தக்க வைத்துக் கொள்வீர்கள். வருமானத்தை தேவைகளுக்கு தகுந்தபடி ஈட்டிக் கொள்வீர்கள். எதையும் முன் கூட்டியே நன்கு யோசித்து செயல்படுவீர்கள். காரணமின்றி யாரிடமும் தொடர்பு கொள்ள மாட்டீர்கள். பணிபுரியுமிடத்தில் பெண்களிடம் யோசித்து பேசுவதும் பழகுவதும் உங்களின் பாதுகாப்பிற்கு நல்லது.
 
இந்த ஆண்டு இறுதியில் நவம்பரில் ராகு / கேது பெயர்ச்சிக்கு பின்பு கேது மூன்றில் அமர்ந்து உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நற்பலனை பெற்று தருவார் கேட்டதை கிடைக்க செய்வார். உங்களின் மூயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். மே மாதம் குரு பெயர்ச்சி பெறுவதால் கேதுவுடன் இணையும் போது பல வழிகளில் உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும். உங்களின் கலை பயணம் சிறப்பாக அமைத்தாலும் பல சவால்களை அடைய வேண்டி இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். இனி வரும் காலம் உங்களுக்கு சிறப்பாக அமையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
வெண்மை, மஞ்சள், நீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
தெற்கு, தென் கிழக்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
3, 6, 2.
 
அதிர்ஷ்ட மாதம்:
 
ஏப்ரல், மே, ஜுலை, ஒகஸ்ட்.
 
பரிகாரங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும், செவ்வாய் கிழமை சுப்ரமணியரை வழிபாடு செய்வதும் நன்மையை தரும்.