குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - மேஷம்

ஆக்கபூர்வமான செயல்களை செய்து முன்னேறும் மேஷ ராசி வாசகர்களே!
இதுவரை உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் இருந்த குரு இனி முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தையும், பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்வை இடுவது மிக சிறப்பு.
தனஸ்தானத்தில் இதுவரை இருந்து பல்வேறு நன்மைகளை செய்து வந்த குரு பகவான் திருமண தடைகளால் தள்ளி போன காரியங்கள் சிறப்பாக அமையும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். எடுத்த சில காரிங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். கூட்டு தொழிலின் மூலம் சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள்.
உங்களின் பாக்கியஸ்தானாதிபதி வீட்டை அவரே பார்வை இடுவதால் பல்வேறு காரணங்களால் தள்ளிபோய் கொண்டிருந்த காரியம் செயல்பட துவங்கும். குழந்தை பாக்கியம், குல தெய்வத்தின் வழிபாடுகள், தீர்த்த யாத்திரை சென்று வருதல் வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள் சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டு சிறப்பாக செயல்படுவீர்கள்.
உங்களின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். லாபஸ்தானத்தில் சனி ராகுவை பார்ப்பதால் செய்யும் தொழில் பலவழிகளில் பொருளாதார வளர்ச்சி உண்டாகும். 11-05-2025 முதல் குரு உங்களுக்கு நற்பலன்களை தருவார். 06-06-2025 முதல் 06-07-2025 வரை அஸ்தங்கம் ஆவதால் தங்கத்தை பத்திரமாக வைத்து கொள்வது நல்லது. 08-10-2025 முதல் குரு அதிசாரமாக கடகத்திற்கு செல்வதால் அதுவரை நன்மை உண்டாகும். சிலருக்கு இழத்த சொத்துகளை மீட்கவும், எதிர்ப்புகளை குறைத்து சுமூகமான சூழ்நிலையும் உருவாகும். தொடர்ந்து இறை வழிபாடு செய்வது நல்லது.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு நெய் தீபமிட்டு மஞ்சள் நிற வஸ்திரம் இட்டு உங்களின் வேண்டுதலை சொல்லி வர பல வழிகளில் நன்மைகள் உண்டாகும்.