2025 - 2026 ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

2025 - 2026 ராகு / கேது  பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

விவேகத்துடனும், விழிப்புடனும் செயல்படும் மேஷ ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு வரும் 26-04-2025 அன்று மாலை 04.20 மணிக்கு கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் பிரவேசம் செய்கிறார்கள்.
 
இதுவரை கன்னி ராசியில் இருந்து ஆறாமிடத்தில் கேது அமர்ந்து பல்வேறு உடல் உபாதைகளையும், கடன் சுமைகளையும் தந்து வந்த கேது இனி பூர்வ புண்ணியஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் முயற்சி ஸ்தானத்தையும் லாபஸ்தானத்தையும் பார்ப்பதும் ஏழாமிடத்தை பார்வை இடுவதும் சில காரிய தடைகளையும். உங்களின் முயற்சிக்கு எந்த பலனும் அமையாமலும். எதிர்பார்த்த சில விசயங்கள் தாமதமும் ஆகும். திருமண தடைகள் உண்டாகும் என்பதால் நாகதேவதை வழிபாடும். விநாயகர் வழிபாடு தொடர்ந்து செய்து வர உங்களின் வெற்றி பாதையை நீங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
 
இனி இதுவரை விரையஸ்தானத்தில் இருந்த ராகு லாபஸ்தானத்தில் சனியுடன் இணைவு பெறுவது உங்களின் தொழிலில் முன்னேற்றம் காண்பதுடன் குரு பெயர்ச்சிக்கு பின்பு இன்னும் சிறப்பாக உங்களின் செயல்கள் வளம் பெறும். குரு பார்வை பெற்றவுடன் விபரீத ராஜயோக பலன்களை பெறுவீர்கள். எந்த தொழில் செய்தாலும் அதில் வளம் பெறும் வாய்ப்புகள் அமையும். திடமான நம்பிக்கையே உங்களை மேலும் சிறப்படைய செய்யும். எதிர்கால நற்பலன்கள் உருவாக்கி கொள்ளும் நல்ல சூழ்நிலைகள் அமைய அம்மன் வழிபாடுகள் செய்து வர உங்களுக்கு ஊக்கமும் பொருளாதார வளமும் கிடைக்க பெறுவீர்கள்.
 
பரிகாரங்கள்:
 
வியாழக்கிழமைகளில் காலை 06 - 07 மணி தொடர்ந்து விநாயகர் வழிபாடும் தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள உங்களின் சகல காரியமும் நன்மையை தரும்.