முருகர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

முருகர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, இன்று நடக்கிறது. சிவகாமி சமேத நடராஜருக்கு, காலை 5.30 மணிக்கு அபிஷேகம், 8.30 மணிக்கு மாணிக்கவாசகர் சுவாமிகளின் திருவெம்பாவை உற்சவம், சோடசோப தீபராதனை நடக்கிறது. சுவாமி பிரகார புறப்பாடும், ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, திருக்கோவில் அறங்காவலர் குழுவினரும், நாட்டாண்மைகளும், ஆலய அர்ச்சகர்களும் செய்து வருகின்றனர்.