ரெய்கி பாகம் - 9
நிறங்களும், தொடுணர்வும்
நிறங்களுக்கும், சக்கரங்களுக்கும் மட்டுமன்றி சில நோய்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள் எம் முன்னோர்கள். ரெய்கி சிகிச்சையில், சில சக்கரங்களைச் சக்தி யூட்டும்போது, சக்தியுடன் சில நிறங்களைக் கலந்து செலுத்தினால் கிடைக்கக்கூடிய பலன்கள் அதிக மாக உள்ளன. சில நிறங்களை, குறிப்பிட்ட சில வியாதிகளுக்காகத் தரும்போது, அந்த வியாதி, ஆச்சரியப்படும் விதத்தில் தீர்ந்துபோகிறது. சில நிறங்கள், சில அதிர்வுகளோடு தொடர்புள் ளவை. அந்த அதிர்வுகள், சங்கீத அதிர்வுகளாகவும் இருக்கலாம். சங்கீதத்தால் வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்றும் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாகவும் எத்தனையோ சங்கீத விற்பன்னர்கள் கூறி வருகின்றனர்.
நிறம் - சங்கீதம் - சக்கரம் என்று தொடர்புபடுத்தி ஆய் வுகள் மேற்கொண்டால், மேலும் நல்ல பலன்களைப் பெற முடியும். ஒவ்வொரு நிறத்துக்கும் சில குணங்கள், தன்மைகள் இருக்கின்றன. அதனால் தான், வீட்டின் பிரதான மண் டபத்துக்கு ஒரு நிறம். படுக்கை அறைக்கு ஒரு நிறம், படிக்கும் அறைக்கு ஒரு நிறம், சமையல் அறைக்கு ஒரு நிறம் என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகிறது. நம்முடைய உடலிலேயே வானவில்லின் ஏழு நிறங்களும் உள்ளன. ஒவ்வொரு சக்கரமும் ஒவ் வொரு வண்ணத்துடன் சுழலும் நீர்ச்சுழி போலவே உள்ளன.
அதன்படி,
1. மூலாதாரம் (Base Chakra) - சிவப்பு
2. ஸ்வாதிஷ்டானம் (Sacral Chakra) - ஆரஞ்சு
3. மணிபூரகம் (Solar Plexus) - மஞ்சள்
4. அநாகதம் (Heart Chakra) - பச்சை
5. விசுத்தி (Throad Chakra) - நீலம்
6. ஆக்ஞா (Third eye chakra) - கருநீலம்
7. சஹஸ்ரஹாரம் (Crown Chakra) வயலெட்
என்று இருப்பதால், ரெய்கியின் தியானங்க ளும் இந்த வண்ணங்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன.எந்தச் சக்கரம், எந்த வண்ணத் தைக் கொண்டிருக்கிறதோ, அந்தச் சக்கரம் சார்ந்த உடல் உறுப்புகளுக்கு அந்தந்த வண்ணம் பர வும்போது, அந்தச் சக்கரமும் அது சார் ந்த பகுதிகளும் மேலும் புத்துண ர்வு பெறுவதை, ஆழ்ந்த தியானத் தில் இருக்கும் போது உணர முடியும்.
ரெய்கி சிகிச்சை பெறுவதும், மற்றவருக்கு அளிப்பதும் மிகவும் சுலபம். ரெய்கி சிகிச்சை பெறுவதற்கு, கஷ்டப்பட வேண்டியதே இல்லை. கண்களை மூடிக் கொண்டு நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்திருந்தாலே போதும். முடியாதவர்கள் படுத்துக்கொள்ளலாம்.