ரெய்கி பாகம் - 5

ரெய்கி பாகம் - 5

1. வெள்ளைப் படிகம் (White Crystal):

இந்த இரத்தினம் வெள்ளை நிறத்துடன் கூடியது. இது 7 வண்ணங்களையும் வெளிவிடும் தன்மை கொண்டது. கிரிஸ்டல்கள் பூமிக்கடியில் பல இலட்சக்கணக்கான வருடங்களாகப் படிப்படியாக உருவாகின்றன. தண்ணீர் கெட்டித்தன்மையாக்கப்பட்டு அத்தோடு பூமிக்கடியில் உள்ள (Minerals) தாது உப்புக் களும் சேர்ந்து படிகமாக மாறுகிறது. இவைகளுக்கு (Heart Beat) உயிர்த் துடிப்பும் உண்டு, ஒரு நொடிக்கு 35658 அதிர்வுகளை உடையது. நாம் சொல்பவைகளை உள் வாங்கிக் கொள்ளும் தன் மையும் இவைகளில் காணப்படுகிறது. மேலும் இவை உள் வாங்கியவைகளை வெளிவிடும் தன்மையும் கொண்டதாக விளங்குகின்றது. இதை பல வடிவங்களில் அணியலாம். மாலை, தங்கக்காப்பு, மோதிரக்கல், பிரமிடு, பென்சில், படிகப்பந்து  இன்னும் பல வடிவங்களில் இந்த படிக இரத்தினம் உள்ளது.

சூட்டு உடம்பு உடையவர்கள் வெள்ளைப் படிகத்தை இரவு தண்ணீரில் போட்டு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர சூடு குறையும். உடம்பு வலிக்கு மேல் பூச்சாகவும் ஜபமாலையாகவும் இதைப் பயன்படுத்தலாம். வைரத்திற்குப் பதிலாகவும் இவற்றை உபயோகிக்கலாம். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் போடலாம். பென்சில் படிகத்தை பாக்கெட்டில் வைத்து வர, நல்ல சக்திகள் உருவாகி, நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தும்.

2. ரோஜா நிறப் படிகம்


இது ரோஜா நிறத்தில் இருக்கும், உடம்புக்கு சூட்டுத் தன்மையைக் கொடுக்கும். மூச்சிரைப்பு, ஆஸ்த்துமா, சுவாசப்பை அடைப்பு பிரச்சனை யைக் குணப்படுத்துவதில் மிகவும் நன்மை செய்யும். தீய சக்திகளை நீக்கவும், திருஷ்டி போக்கவும் இந்த இரத்தினம் ஏற்றது. கட்டிடங்களை ஆரம்பிக்கும்போது பூமிக்கடியில் போட்டுக் கட்டும்போது எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல் வீடு நல்ல முறையில் இருக்கும். இங்கிலாந்து அரண்மனையை எதிரிகள் தாக்காது இருக்க, இந்த இரத்தினத்தை அதனடியில் போட்டு இருப்பதாக வரலாறு குறிப்பிடுகிறது. இதனை குளிக்கும் தண்ணீரில் போட்டும் குளிக்கலாம். மிக முக்கியமாக உறவுகள் மேம்படவும், கணவன்-மனைவி அன்பு அதிகரிக்கவும் இந்தத இரத்தினத்தைப் பயன்படுத்துவர்.

3. செவ்வந்திக்கல்

இது இலேசான ஊதா நிறத்திலும், அடர்த்தியான ஊதா நிறத்திலும் இருக்கும். இந்த இரத்தினத்தில் அணிவது ஆன்மீகத்தில் உயர் நிலையை அடைய உதவும். இக்கல்லைப் பிரமிடு வடிவ தியான மண்டபக் கட்டிட அடியில் போடலாம்.

நரம்புத் தளர்ச்சி உடையவர்கள் மாலையாகப் போட்டுக் கொள்ளலாம். தன்னடக்கம், மனோபலம், தன்னம்பிக்கை போன்றவற்றிற்கு பிரமிடை நெற்றியில் வைத்துக் குணப்படுத்தலாம். மிக முக்கியமாக, படிக்கும் குழந்தைகள் ஞாபக சக்தி, அறிவுத் திறன் அதிகரிக்க இதைப் பயன்படுத்தலாம். இதனை மருத்துவத்திற்கு படிக்கும் மாணவர்கள் போட்டுக் கொள்ளும்போது நல்ல மதிப்பெண் பெற முடியும், தேர்வுச்ச் சமயத்தில் பதற்றம் இல்லாமலும் இருக்கும். இதனை ஆண்களும், பெண்களும் அணிந்தால் இலச்சுமி கடாட்சம் ஏற்படும். மன உளைச்சல், மனப்பதட்டம் உள்ளவர்கள் பயன்படுத்தினால் அழுத்தம் குறையும், நல்ல மன அமைதி கிடைக்கும். மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகளுக்கும் இதனைப் பயன்படுத்தலாம்.

4. பச்சைக்கல் (ஜேடு):

ஜேடு என்றால் பல வர்ணங்களில் உள்ள விலையுயர்ந்த கல்லாகும். இவை பெரும்பாலும் பச்சை வண்ணத்திலேயே இருக்கும். இதனை மரகதத்திற்குப் பதிலாக உபயோகிக்கலாம். இருதயத்திற்கு உரியது.

1. இருதயத்தில் இரத்த ஓட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,  சர்க்கரை நோய் உள்ளவர்களும் அணியலாம்.

2. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மாலை யாக அணிந்து கொள்வதால் இரத்த அழுத்தம் குறைகிறது.

சுவாசப்பையில் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது. மன அமைதி, நிம்மதி தருகிறது. கிட்னி நோயாளிகள் ஜேடு மாலை அணிந்து, சிறுநீரகப் பகுதியில் இயந்திரம் அல்லது ஜேடு வைத்து குணமடைந்துள்ளனர். உயர் இரத்த அழுத்தம், இதயம், மற்றும் சிறுநீரகம் சம்பந்த நோய்களை அற்புதமாகக் குணப்படுத்துகிறது. மேலும் மிக முக்கியமாக அதிர்ஷ்டத்தையும், வசதிகளையும் அதிகரிக்கச் செய்கிறது. பணப்பெட்டியில் போட்டால் பணம் அதிகரிக்கும், யோகம் பெருகும். இந்த இரத்தினம்  இரத்தம் சம்பந்தப்பட்ட நோயை நீக்குவதில் நல்ல பலன் தரும். உடல் உறுப்புக்கள் எல்லாவற்றையும் சக்தி பெறச் செய்யும். மேலும் வெப்பச் சக்தி கொடுக்கும். இது செவ்வாய் கிரகத்தின் குணத்தை உடையதாகும்.

மிதுனம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த இரத்தினத்தை  அணிந்தால், அவர்களது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக்கும். நாட்பட்ட நோய்களை நீக்கி நல்ல பலனைக் கொடுக்கும்.