மேலதிகாரி / வழிகாட்டியின் புகைப்படம்
வீட்டின் வடமேற்குப்பகுதி `உதவும் மனிதர்கள்' அல்லது `நம்மை ஆதரிப்பவரின்' பகுதியாகும். இந்தப் பகுதியில் உங்களுடைய மேலதிகாரியின் புகைப்படத்தை வைத்தால், நீங்கள் அவருடைய தயவு, அனுதாபம் பெற வாய்ப்புண்டு. அல்லது அதிகாரி உங்களிடம் விரோத மனோபாவம் உடையவராக இருந்தால் அவருடைய புகைப்படத்தை வீட்டின் இந்தப் பகுதியில் வைப்பது நல்லது. அது அவரை உங்களிடம் சற்று கூடுதல் அனுதாபம் காட்டச் செய்யும்.