போர், வன்முறைக் காட்சிப் படங்களைத் தவிர்த்தல்

போர், வன்முறைக் காட்சிப் படங்களைத் தவிர்த்தல்

எப்பொழுதுமே வன்முறைக் காட்சிப் படங்களை மாட்டக் கூடாது. வீட்டின் எந்தப் பகுதியிலும் வன்முறை நிறைந்த காட்சிகள் கொண்ட படங்களை மாட்டக் கூடாது. முக்கியமாகத் தென்மேற்குத் திசையில் கூடவே கூடாது. ஏனெனில் இது உறவுகளுக்கான பகுதி தென்மேற்கில் சண்டைக் காட்சியோ, காட்டு மிருகங்களின் படமோ இருந்தால் வீட்டில் உள்ளவர்களின் உறவுகள் முறிய நேரிடலாம்.

மஹாபாரதப் போர்க் காட்சிகள், வன்முறையைத் தூண்டும் ஆயுதங்களின் படங்கள் இவற்றை மாட்டினால் வீட்டில் வீண் சச்சரவு வாக்குவாதம், குடும்ப உறுப்பினர்களின் உறவில் விரிசல் இவை ஏற்படலாம். மாமியார் மருமகள் சண்டைகள் இம்மாதிரியான படங்களால் தூண்டப்படுவதை, என் அனுபவத்தில் பல முறை கண்டிருக்கிறேன்.

பலர் என்னிடம், மஹாபாரதத்தில் வரும் ஷ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கீதோபதேசம் செய்யும் காட்சியை மாட்டுவதில் என்ன தவறு என்று கேட்கின்றனர். இதற்கான என் பதில் இங்கு அர்ஜுனன் போர் செய்வதற்கான தயார் நிலையில் இருக்கின்றான். இந்த மாதிரிப் படங்கள் வீட்டில் இருந்தால், நமது ஆழ்மனத்தில் எப்போதும் சண்டைக்குத் தயாராகும் உணர்வுகள் இருந்து கொண்டிருக்கும்.