வட திசையில் பீங்கான் மற்றும் மட்பாண்டங்களைத் தவிர்த்தல்
வீட்டின் வட திசையின் மூல சக்தி தண்ணீர். அழிவிற்கு வழிவகுக்கும் சக்திச் சக்கரத்தின்படி நிலம் எனும் சக்தி நீரை அழிக்கிறது. அதனால் பீங்கான் அல்லது மட்பாண்டங்களை வீட்டின் இந்தப் பகுதியில் வைக்கக் கூடாது. அவை இந்தப் பகுதியில் நீர் சக்திக்குத் தீங்கு விளைவிப்பதாகும். உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு எதிராக அமையலாம்.
பளிங்கினால் செய்யப்பட்ட பொருட்கள் அல்லது ஈயக் கண்ணாடி பளிங்கினால் செய்யப்பட்ட தொங்கும் சரவிளக்கு ஆகியவற்றை இந்த வடக்குப் பகுதியில் வைக்கக் கூடாது.
அசல் படிகப் பளிங்குப் பந்துகளையும் இந்தப் பகுதியில் தொங்கவிடக் கூடாது