கீதை ஒரு வற்றாத ஆன்மிகச் சுரங்கம்!

கீதை ஒரு வற்றாத ஆன்மிகச் சுரங்கம்!

பகவத்கீதை மிகவும் உயர்ந்த ஆன்மிகக் கருத்துக்களை வழங்கும் வற்றாத சுரங்கமாக விளங்குகிறது. தனது பக்குவத்திற்கேற்ப, புதிய புதிய உயர்ந்த கருத்துக்களை கீதாமாதாவிடமிருந்து ஆன்மிக சாதகர்கள் பெற முடியும்.

கீதையில் இடம் பெற்றிருக்கும், எல்லாத் தர்மங்களையும் விட்டு என்ற சொற்களுக்குப் பல மேற்கோள்களைக் காட்டி, தர்மங்கள், என்ற சொல்லுக்குக் கர்மங்கள் என்று பொருள் கொள்ளும்படி ஆதிசங்கரர் கூறியுள்ளார். அவ்விதம், எல்லாக் கர்மங்களையும் விட்டு, என்று நாம் பொருள் கொண்டால், கர்மங்கள் என்ற சொல் சுயநலத்துடன், பலன்களை எதிர்நோக்கி, நான் செய்கிறேன் என்ற பரவத்துடன் செய்யும் கர்மங்களையே குறிக்கும். உலகின் ந்னமைக்காக (லோகஸங்க்ரஹத்திற்காக), நான் தான் கர்த்தா என்ற கர்த்ருத்வபாவம் (Sense of doorstep) இன்றிச் செய்யும் கர்மங்கள் கர்மயோகமாக மாறிவிடும். எனவே, “எல்லாத் தர்மங்களையும் விட்டு என்ற சொற்கள் கர்மயோகத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

என்னிடம் சரண் புகுவாயகா என்ற சொற்கள் பக்தியோகத்தைக் குறிக்கிறது. உண்மையான பக்தியின் இலட்சணம் சரணாகதியாகத்தான் இருக்கும். அதாவது ஆத்ம நிவேதனமாகத்தான் இருக்கும. மூன்றாவது சொற்றொடரான நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன் என்பது ஞானயோகத்தைக் குறிக்கிறது என்று கொள்ளலாம். பாவங்களிலெ்லாம் மிகவும் பெரிய பொல்லாத பாவம், ஆத்மாவை உணராத அக்ஞானம் என்ற பாவம்தான். இந்த அக்ஞானம் என்ற பாவம் ஒழிக்கப்பட்டால் அனைத்து பாவங்களும் ஒழித்துவிடும்.

கருத்துடன் ஆற்றப்படும் கர்மயோகம், பரவசத்துடன் உண்மையாகக் கடைப்பிடிக்கப்படும் பக்தியோகம் ஆகிய இரண்டும் இறுதியில் ஞானயோகத்தில் நிறைவுபெறும் என்பதே கீதையின் சரம சுலோகத்தின் தாத்பர்யமாகும்.

கீதையின் சாராம்சமே இருந்த சரம சுலோகத்தில் அடங்கியருக்கிறது என்று பெரியோர்கள் கருதுகிறார்கள்.