ஸ்ரீ முருகன் 108 போற்றிகள்!

ஸ்ரீ முருகன் 108 போற்றிகள்!

ஓம் போத நிர்க்குண போதா நமோ நம
ஓம் நாத நிஷ்கள நாதா நமோ நம
ஓம் பூரணக் கலை சாரா நமோ நம
ஓம் பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோ நம
ஓம் நீப புஷ்பக தாளா நமோ நம
ஓம் போக சொர்க்கபு பாலா நமோ நம
ஓம் சங்கமேறும் மாதமித்த்ரய சேயே நமோ நம
ஓம் வேத னத்ரய வேளே நமோ நம
ஓம் வாழ் சகத்ரய வேளே நமோ நம
ஓம் வேத வித்தகா சாமீ நமோ நம
ஓம் வேல் மிகுந்த மாசூரா நமோ நம 
ஓம் விம சரக்யு காளா நமோ நம
ஓம் விந்துநாத வீரபத்ம சீர்பாதா நமோ நம
ஓம் நீலமிக்க கூதாளா நமோ நம
ஓம் மேக மொத்த மாயூரா நமோ நம
ஓம் விண்டிடாத போத மொத்த பேர் போதா நமோ நம
ஓம் பூத மற்றுமே யானாய் நமோ நம
ஓம் பூரணத்துளே வாழ்வாய் நமோ நம
ஓம் துங்கமேவும் பூதரத் தெலாம் வாழ்வாய் நமோ நம
ஓம் ஆறிரட்டி நள் தோளா நமோ நம20
ஓம் பூஷணத்துமா மார்பா நமோ நம
ஓம் ஆர்யை பெற்ற சீராளா நமோ நம
ஓம் சூரையிட்டு நீள் பேரா நமோ நம
ஓம் ஆரணத்தினார் வாழ்வே நமோ நம
ஓம் சீதள வாரிஜ பாதா நமோ நம
ஓம் நாரத கீத விநோதா நமோ நம
ஓம் சேவல மாமயில் ப்ரீதா நமோ நம
ஓம் மறைசாரா தேடுஞ் சேகரமான ப்ரதாபா நமோ நம
ஓம் ஆகமசார சொரூபா நமோ நம
ஓம் தேவர்கள் சேனை மகீபா நமோ நம
ஓம் கதி தோயப் பாதக நீவு சூடாரா நமோ நம
ஓம் மாவசிரேச கடோரா நமோ நம
ஓம் பாரினிலே ஜய வீரா நமோ நம
ஓம் மலைமாது பார்வதியாள் தரு பாலா நமோ நம
ஓம் நாவல ஞான மனோலா நமோ நம
ஓம் பால குமார சுவாமீ நமோ நம
ஓம் வேத மந்த்ர சொரூபா நமோ நம
ஓம் ஞான பண்டித சாமீ நமோ நம
ஓம் வெகு கோடி நமசம்பு குமாரா நமோ நம
ஓம் போக அந்தரி பாலா நமோ நம
ஓம் நாகபந்த மயூர நமோ நம
ஓம் பரசூரர் சேததண்ட நிநோதா நமோ நம
ஓம் கீத கிண்கிணி பாதா நமோ நம
ஓம் தீர சம்ப்ரம வீரா நமோ நமோ
ஓம் கிரிராஜ தீபமங்கள ஜோதீ நமோ நம
ஓம் தூய அம்பல லீலா நமோ நம
ஓம் தேவ குஞ்சரி பாகா நமோ நம
ஓம் நீதி தங்கிய தேவா நமோ நம
ஓம் பூதலந்தனை யாள்வாய் நமோ நம
ஓம் பணியாவும் பூணுகின்ற பிரானே நமோ நம
ஓம் வேடர் தங்கொடி மாலா நமோ நம
ஓம் போதவன் புகழ் சாமீ நமோ நம
ஓம் அரிதான வேத மந்திர ரூபா நமோ நம
ஓம் ஞான பண்டித நாதா நமோ நம
ஓம் வீர கண்டை கொள் தாளா நமோ நம
ஓம் அழகான மேனி தங்கிய வேளே நமோ நம
ஓம் வானபைந் தொடி வாழ்வே நமோ நம
ஓம் வீறு கொண்ட விசாகா நமோ நம
ஓம் சிவசிவ ஹரஹர தேவா நமோ நம
ஓம் தெரிசன பரகதி யானாய் நமோ நம
ஓம் திசையினு மிசையினும் வாழ்வே நமோ நம
ஓம் செஞ்சொல் சேரும் திருதருகலவி மணாளா நமோ நம
ஓம் திரிபுர மெரிசெய்த கோவே நமோ நம
ஓம் ஜெயஜெய ஹரஹர தேவா நமோ நம
ஓம் உம்பர்கள் ஸ்வாமீ நமோ நம
ஓம் எம்பெருமானே நமோ நம
ஓம் ஒண்டொடி மோகா நமோ நம
ஓம் சரவண ஜாதா நமோ நம
ஓம் சத தள பாதா நமோ நம
ஓம் கருணையை தீதா நமோ நம
ஓம் அபிராமி தருணக தீரா நமோ நம
ஓம் நிருபமர் வீரா நமோ நம
ஓம் சமதள வூரா நமோ நம
ஓம் ஜகதீச பர சொரூபா நமோ நம
ஓம் கரர்பதி பூபர் நமோ நம
ஓம் பரிமள நீபா நமோ நம
ஓம் உமைகாளி பகவதி பாலா நமோ நம
ஓம் இகபர மூலா நமோ நம
ஓம் பவுருஷ சீலா நமோ நம
ஓம் சத்தி பாணீ நமோ நம
ஓம் முத்தி ஞானீ நமோ நம
ஓம் தத்வ ஆதீ நமோ நம
ஓம் விந்துநாத சத்துரூபா நமோ நம
ஓம் ரத்ன தீபா நமோ நம
ஓம் தற்பர தாபா நமோ நம
ஓம் சிங்கார ரூப மயில் வாகன நமோ நம
ஓம் கந்த குமாரசிவ தேசிக நமோ நம
ஓம் சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம
ஓம் விருதோதை சிந்தான சோதி கதிர்வேலவ நமோ நம
ஓம் கங்காள வேணிகுரு வானவ நமோ நம
ஓம் அரிமரு கோனே நமோ நம
ஓம் அறுதி யிலானே நமோ நம
ஓம் அறுமுக வேளை நமோ நம
ஓம் அரகர சேயே நமோ நம
ஓம் இமையவர் வாழ்வே நமோ நம
ஓம் அருண சொரூபா நமோ நம
ஓம் தென்பரங் குன்றுறை தேவா நமோ நம
ஓம் செந்திலம் பதிவாளர் சேயே நமோ நம
ஓம் தென்பழநிமலை மேவு தீரா நமோ நம
ஓம் திருவே ரகத்திலுறை தேனே நமோ நம  
ஓம் குன்றுவதோ றாடல்புரி குமரா நமோ நம
ஓம் பழமுதிர் சோலை வளர்பதியே நமோ நம
ஓம் மயில்மிசை வருமொரு வரதா நமோ நம
ஓம் சேகர வாரண வேல்வீரா நமோ நம
ஓம் மைவருகங் கண்டத்தர் மைந்தா நமோ நம
ஓம் குருவாய் வருவாய் குகனே நமோ நம