நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - ரிஷபம்

நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - ரிஷபம்

உறுதியான மனம் கொண்டு காரியத்தை செயல்படுத்தும் ரிசப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு திறம்பட செயல்படும் தைரியமும் துணிச்சலும் உண்டாகும். உங்களின் ராசியை மாத முதல் பாதியில் குரு பார்வையும், பின் பாதி தனஸ்தானத்தையும் குரு பார்ப்பதும் வளமான செயல்பாடுகளை செய்து பயன் பெறுவீர்கள். நினைத்ததை செயல்படுத்தி காட்டுவீர்கள். பசுமையான எதிர் காலத்தையும் நிலையான நல்ல தொழிலையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். சுமையாக இருந்த சில விடயங்கள் உங்களுக்கு எளிய முறையில் பலன் பெறும் வாய்ப்பை பெறுவீர்கள். எல்லோரிடமும் மென்மையாக நடந்து கொள்வீர்கள். மறந்த விடயங்களை ஞாபகபடுத்திக் கொள்வீர்கள். சிறந்த செயல் ஆக்கங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சொந்த உறவுகளுக்கு தடைகள் நீங்கி உறவுகளை வளர்த்துக் கொள்வீர்கள். பொருளாதார நிலை மேம்படும்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
07.11.2021 ஞாயிறு இரவு 02.01 முதல் 10.11.2021 புதன் அதிகாலை 04.39 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:
 
கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சோதனைகளை சாதனைகளாக ஆக்கி கொள்வீர்கள். அரசியலிலும், ஆன்மீகத்திலும் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். பாதுகாப்பான சூழ்நிலைகளை உருவாக்கி கொள்வீர்கள்.
 
ரோகிணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
வெளிநாட்டு பயணம் சிறப்பாக அமையும். வெளி நபர்களிடம் எதிர்பார்த்து உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். கலைதுறையில் சிறந்து விளங்குவீர்கள். புதிய திட்டங்களுக்கு வழி வகை கிடைக்கும்.
 
மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள்:
 
ஒரு முடிவை எடுத்த பின்பு அதனை செயல்படுத்துவதில் பின் வாங்காமல் கடைசி வரை அதனை முடித்து விடுவீர்கள். முக்கிய செயல்பாடுகளை விரைந்து முடித்து வெற்றியை காண்பீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, ஒரஞ்சு, நீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென் கிழக்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, செவ்வாய்.
 
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து நெய் தீபமிட்டு வெள்ளை நிற பூ வைத்து உங்களின் வேண்டுதலை ராகு காலத்தில் வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும். பொருளாதார வளர்ச்சியை பெற்று தரும்.