நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - மிதுனம்

நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - மிதுனம்

விறுவிறுப்பான செயல்பாடுகளால் மேன்மை அடையும் மிதுன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு முற்பகுதியில் தனஸ்தானத்தையும் பிற்பகுதியில் உங்கள் ராசியையும் குரு பார்வை பெறுவதும் தனஸ்தானத்தை சனி பார்ப்பதும் உங்களின் ராசிநாதன் பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பதும் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். குறுகிய கால பணிகளை விரைவாக முடித்து விடுவீர்கள். நீண்ட கால பணிகளை யோசித்து கவனமாக செயல்படுவீர்கள். அறிவியல், வினோத ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதும், அதன் மூலம் புதிய விடயங்களை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். அமைதியான உங்களின் போக்கு நல்ல பலனை பெற்று தரும். விளையாட்டு துறையினரும், கலை துறையினரும் முன்னேற்றம் காணும் காலமாக அமையும். பணிபுரியமிடத்தில் கடமையை செய்து நல்ல பலனை பெறுவீர்கள். நிலையான உறுதியான செயல்பாடுகள், நல்ல பலனை பெற்று தரும்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
10.11.2021 புதன் அதிகாலை 04.40 முதல், 12.11.2021 வெள்ளி காலை 08.33 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:
 
மிருகசீரிடம் 3, 4 ஆம் பாதங்கள்:
 
வரவுக்குள் செலவு செய்வது நல்லது. புதிய செலவுகள் வந்து மறையும். கலைஞர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். எழுத்தாளர்களுக்கு சிறப்பான பாராட்டு கிடைக்கும்.
 
திருவாதிரை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
அவசரத்தில் எதையும் செய்யாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. பாதுகாப்பான தொழிலில் முதலீடு செய்வதும். கவனமுடன் செயல்படுவதன் மூலம் வருவாயையும் பெருக்கிக் கொள்வீர்கள்.
 
புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
எதையும் கணக்கிட்டு செயல்படுவது நல்லது. பாதிப்பிலிருந்து மீண்டு வருவீர்கள். திருமண காரியத்தில் சிலருக்கு சொந்த விருப்பம், தடையின்றி நிறைவேறும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெற்றிலை மாலை, நெய் தீபமிட்டு மிளகு அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள தடைபட்ட காரியம் சீக்கிரம் நடந்து வெற்றியை தரும்.