நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - கன்னி

நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - கன்னி

கருத்துகளால் செயல்பாடுகளை துரிதப்படுத்தி கொள்ளும் கன்னி ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், குரு பெயர்ச்சிக்கு பின்பு தொழில் மற்றும் தன ஸ்தானத்தை குரு பார்ப்பதும் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்று தரும். பல விடயங்களில் ஈடுபாடு கொள்வதும், பல செயல்களை ஒரே நேரத்தில் செய்வதும் உங்களுக்கு எளிமையாக அமையும். தனிப்பட்ட செயல்பாடுகளை திறம்பட செய்து முடிக்கும் திறமையை கொண்டு விளங்குவீர்கள். சனி உங்களின் தனஸ்தானத்தை பார்ப்பது உங்களின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதிய திட்டங்களுக்கு வழியை தேடுவீர்கள். கூடுதல் பணிகளை செய்யும் வாய்ப்புகளையும் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறும் வாய்ப்பையும் பெறுவீர்கள். ஆராய்ச்சி செய்வதில் திறமைசாலியாக இருப்பீர்கள். பெண்களுக்கு புதிய தொழில் துவங்க முதலீடுகளுக்கு வங்கி மூலம் கடன் வசதி கிடைக்க பெறுவீர்கள். கலை துறையினர் மேன்மை அடைவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
16.11.2021 செவ்வாய் இரவு 10.49 முதல் 19.11.2021 வெள்ளி காலை 09.16 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:

உத்திரம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
அரசாங்க காரியங்கள் அனுகூலமாக அமையும். காலத்தை அறிந்து செயல்படுவீர்கள். மருத்துவ துறையினருக்கு வருமானம் பெருகும். அரசியலில் நல்ல ஆலோசகராக இருப்பீர்கள்.
 
ஹஸ்தம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சுறுசுறுப்புடனும், அமைதியாகவும் செயல்படுவீர்கள். எதையும் முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்வீர்கள். சரியான நேரத்தில் உங்களின் வேலையை முடித்து கொடுப்பீர்கள்.
 
சித்திரை 1, 2 ஆம் பாதங்கள்:
 
சிக்கலான பிரச்சனைகளை கூட எளிதில் முடித்து விடுவீர்கள். பாதகமான காரியத்தை கூட திறமையால் சரி செய்து விடுவீர்கள். குடும்ப ஒற்றுமைக்கு உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, ஓரஞ்சு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென் மேற்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்.
 
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்குள் நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு ஒன்பது முறை வலம் வந்து வேண்டிக்கொள்ள உங்களின் அனைத்து காரியமும் வெற்றியும், நல்ல பலனும் கிடைக்கும்.