நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - தனுசு

நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - தனுசு

வசதியான வாழ்க்கையை வாழ விரும்பி, திட்டமிட்டு செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தன காரகன் சனி அமர்ந்தும், முற்பகுதியில் குரு தொழில் ஸ்தானத்தையும் பிற்பகுதியில் லாபஸ்தானத்தையும் பார்ப்பது நல்ல பலனையும், தொழிலில் லாபகரமான சூழ்நிலையும் உருவாகும். காரியத்தில் கண்ணாக இருக்கும் உங்களுக்கு சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சாதகமாக அமையும். உங்களின் செயல்பாடுகளில் வெற்றி பாதையை நோக்கி பயணம் இருக்கும். கவலைகளை மறந்து சுதந்திரமாக இருப்பீர்கள். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமையும் சகிப்பு தன்மையும் உண்டாகும். வெளியூர் பயணம் சிறப்பாக அமையும். மருத்துவம், வாகன வசதி (டிராவல்ஸ்) பொறியாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்க பெறுவீர்கள். புதிய திட்டத்தை செயல் படுத்த துவங்குவீர்கள். பொருளாதார நிலை தன்னிறைவு பெறும்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
24.11.2021 புதன் காலை 08.11 முதல் 26.11.2021 வெள்ளி மாலை 05.24 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:
 
மூலம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
எதை செய்தாலும் காரணம் கேட்காமல் செய்து விட்டு கேட்பீர்கள். சிலருக்கு உதவி செய்ய போய் அதுவே உங்களுக்கு தலைவலியாக மாறலாம் என்பதால் எதையும் கவனமும் செய்யவும்.

பூராடம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
வசதிகளை மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துவீர்கள். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நிறைய முயற்சிகளை எடுப்பீர்கள். பொருளாதாரத்தை சரிசெய்து கொள்வீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்:
 
நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கடன் சுமை குறைந்து நிம்மதி அடைவீர்கள். செய்யும் தொழிலில் முழு கவனம் செலுத்தி வளர்ச்சியை பெற்று வளம் பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, சனி.
 
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமைகளில் முருகனுக்கு இலுப்பெண்ணெய் விளக்கு போட்டு சிவப்பு நிற ஆடை அணிவித்து நெய் கலந்த அன்னம் வைத்து உங்களின் வேண்டுதலை சொல்லி வர எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள்.