மே மாத ராசி பலன்கள் 2023 - விருச்சிகம்

மே மாத ராசி பலன்கள் 2023 - விருச்சிகம்

பொது விடயங்களில் துணிச்சலுடன் செயல்படும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு களத்திரஸ்தானாதிபதி சுக்கிரன் பார்வை பெறுவதும், தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் லாபஸ்தானத்தில் அமர்வதும் நல்ல பலனை பெற்றுத் தரும். தொழில் வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு வந்து சேரும். நீண்ட நாட்கள் கவனம் செலுத்தி வந்த சில காரியம் விரைவில் நடந்து முடியும். புதிய வழக்குகள் வந்தாலும் அதனை எளிதில் சந்திப்பீர்கள். தொழிற்சங்கத்தில் சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். காலத்தையும், நேரத்தையும் வீணாக்காமல் தொடர்ந்து முன் முயற்சிகளை செய்து வருவீர்கள். உங்களின் ராசிக்கு அர்த்தாஷ்ட சனி காலம் என்பதால், உடல் நலனில் கவனம் செலுத்தி, மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று பலன் பெறுவது நல்லது. தொழிலில் முழு கவனம் செலுத்தினால் நன்மை உண்டாகும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
21.05.2023 ஞாயிறு இரவு 10.13 முதல் 24.05.2023 புதன் காலை 08.41 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

விசாகம் 4ம் பாதம்:
 
எதையும் எளிதில் புரிந்து கொள்வீர்கள். மன சஞ்சலம் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். கல்வியில் வளர்ச்சி உண்டாகும். நண்பரின் ஆதரவு கிடைக்கும்.
 
அனுஷம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
உழைக்கும் சராசரி மனிதர்களின் புத்தியில் உங்களின் கை ஓங்கி நிற்கும். தடைபட்டு இருந்த காரியம் செயல்படதுவங்கும் வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
 
கேட்டை 1. 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கணணி துறையில் சாதனையாளராக இருப்பீர்கள். மன வலிமையுடன் செயல்பட்டு நன்மையை பெற்று தொழிலிலும், உத்தியோகத்திலும் மேன்மை அடைவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
ஆரஞ்சு, வெண்மை, சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
செவ்வாய், திங்கள், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்குள் நவகிரக வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள சகல காரியமும் நன்மை உண்டாகும்.