மே மாத ராசி பலன்கள் 2023 - துலாம்

மே மாத ராசி பலன்கள் 2023 - துலாம்

காலத்திற்கு ஏற்றப்படி செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், யோகாதிபதி சனியின் பார்வை லாபஸ்தானத்திலும், தனஸ்தானத்திலும் இருப்பதும்.. உங்களின் தொழில் சார்ந்த அனைத்து பணிகளும் சிறப்பாக இயங்கும். உங்களின் உறுதியான நம்பிக்கை, அனைத்து காரியங்களுக்கும் பக்கபலமாகயிருந்து சிறப்பாக செயல்படும். வாகன வசதிகளை பெறுவீர்கள். கலைதுறையில் உங்களின் வளர்ச்சி முன்னேற்றம் காணும். ஆடம்பரமான வாழ்க்கையை கைவிட்டு, எளிமையான வாழ்க்கை சூழ்நிலைகளை வளர்த்து கொள்வீர்கள். புத்துணர்வும், புது பொலிவும் கொண்டு சிறப்பாக செயல்படுவீர்கள். பெண்களின் பல நாட்கள் பிரச்சனை தானாக நல்ல முடிவுக்கு வந்து விடும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் சிலருக்கு உண்டு. நீங்கள் எதையும் புரிந்து செய்வதால் மேலும் நன்மை உண்டாகும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
19.05.2023 வெள்ளிகிழமை பகல் 02.01 முதல் 21.05.2023 ஞாயிறு இரவு 10.12 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

சித்திரை 3, 4 ஆம் பாதங்கள்:
 
எதையும் சவாலாக செயல்பட்டு முடித்து கொடுப்பீர்கள். விளையாட்டு துறையில் பரபரப்பாக இலக்கைத் தொடுவீர்கள். உடல் நலனின் முன்னேற்றம் இருக்கும். 
 
சுவாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கடந்த வந்த பாதையிலிருந்த குறைகளை நீக்கி மேன்மை பெறுவீர்கள். நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வீர்கள். பணபுழக்கமும் இருக்கும்.
 
விசாகம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
திருமண காரியம் சிறப்பாக அமையும். எதிர்கால திட்டங்களுக்கு கூடுதல் முன்னேற்றம் தரும். வாகன வசதி அமையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, மஞ்சள், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வெள்ளி, ஞாயிறு, திங்கள்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமை சுப்ரமணிய சுவாமிக்கு சிவப்பு நிற பூ வைத்து துவரைப் பருப்பு சாதம் நைவேத்தியம் வைத்து தீபம் ஏற்றி வணங்கி வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் ஜெயமாகும்.