மே மாத ராசி பலன்கள் 2023 - சிம்மம்

மே மாத ராசி பலன்கள் 2023 - சிம்மம்

வெற்றி பாதையை நோக்கி பயணம் செய்யும் சிம்ம ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வையும், பாக்கிய ஸ்தானத்தில் ராசிநாதன் உச்சம் பெற்று முயற்சி ஸ்தானத்தில் பார்வையிடுவதும் உங்களுக்கு பக்க பலமாக அமையும். எதையும் தானாக நடக்கும் என்று இல்லாமல், உங்களின் முயற்சி மூலம் செயல்படுத்தும் போது அதற்கு தகுந்த நற்பலன்களை அடைவீர்கள். சிலருக்கு புதிய பதவிகளும், லட்சியத்தை அடையும் வாய்ப்பும் அமையும். குறைபட்டும், முடங்கியும் இருந்த பலரின் செயல்கள்... இனி சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும். இதுவரை பட்ட சகல துன்பங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். உங்களின் ஒவ்வொரு அசைவும் சில மாற்றத்தை தெளிபடுத்தி காட்டும். உரிய காலத்தில் உங்களின் வாழ்க்கை சூழ்நிலை மாறும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
15.05.2023 திங்கள் அதிகாலை 04.24 முதல் 17.05.2023 புதன் காலை 08.13 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-
 
மகம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
ஒவ்வொரு கால கட்டமும் வெவ்வேறு விதமான வளர்ச்சியை அடைவீர்கள். கலைத்துறையின் முன்னேற்றம் பெறுவீர்கள். பொருளாதார வளர்ச்சி கிட்டும்.
 
பூரம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
புதிய திட்டங்களை செயல்படுத்தும் வளர்ச்சி பாதையை உருவாக்குவீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பால் உங்களின் வாழ்க்கை சூழ்நிலை மாறும்.
 
உத்திரம் 1ம் பாதம்:
 
அரசியலிலும் - பொது வாழ்விலும் உங்களின் செல்வாக்கு உயரும். உங்களையும், உங்களை சார்ந்த அன்பர்களையும் முன்னேற வழிவகுத்து தருவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
சிவப்பு, மஞ்சள், நீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
ஞாயிறு, திங்கள், செவ்வாய்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் வைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டி கொள்ள எளிதில் எல்லாம் சிறப்பாக நடக்கும்.